என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    49-வது நினைவு நாள்: காமராஜர் நினைவிடத்தில் அரசியல் கட்சி தலைவர்கள் மரியாதை
    X

    49-வது நினைவு நாள்: காமராஜர் நினைவிடத்தில் அரசியல் கட்சி தலைவர்கள் மரியாதை

    • பெருந்தலைவர் காமராஜரின் 49-வது நினைவு நாள் இன்று கடைபிடிக்கப்பட்டது.
    • தே.மு.தி.க. சார்பில் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், பார்த்த சாரதி, நல்லதம்பி, நடிகர் ராஜேந்திரன்.

    சென்னை:

    பெருந்தலைவர் காமராஜரின் 49-வது நினைவு நாள் இன்று கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி கிண்டியில் உள்ள அவரது நினைவிடத்தில் அரசியல் கட்சி தலைவர்கள், நாடார் சங்கத்தினர் மற்றும் பல்வேறு அமைப்பை சார்ந்தவர்கள் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.

    காங்கிரஸ் கட்சி சார்பில் திருநாவுக்கரசர் எம்.பி., தணிகாசலம், அரும்பாக்கம் வீரபாண்டியன், கராத்தே ரவி, முன்னாள் எம்.பி. வில்வநாதன்.

    பா.ஜ.க. மேலிட பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, துணை தலைவர் கரு.நாகராஜன், மாநில செயலாளர் கராத்தே தியாகராஜன், நாச்சிகுளம் சரவணன்.

    பா.ம.க. துணை பொதுச்செயலாளர் ஏ.கே.மூர்த்தி, ஜெயராமன், வடிவேலு, சினிவாசன்.

    தே.மு.தி.க. சார்பில் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், பார்த்த சாரதி, நல்லதம்பி, நடிகர் ராஜேந்திரன்.

    த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன், ஜி.ஆர்.வெங்கடேசன், சைதை மனோகரன், நாகராஜ், பிஜிசாக்கோ, முனவர் பாஷா.

    விடுதலை சிறுத்தை கட்சியின் சார்பில் மாநில நிர்வாகிகள் இளஞ்சேகுவாரா, ந.செல்லத்துரை, ரா.செல்வம், சுபாஷ், அப்துல் ரகுமான், மாவட்ட செயலாளர்கள் சைதை ஜேக்கப், இளையா, அப்புன், கரிகால் வளவன்.

    நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், சமத்துவ மக்கள் கட்சி நிர்வாகிகள் சுந்தரேசன், மகாலிங்கம்.

    அ.ம.மு.க. துணை பொதுச்செயலாளர் செந்தமிழன், சி.ஆர்.சரஸ்வதி, சுகுமார் பாபு.

    அ.தி.மு.க. இலக்கிய அணி மாநில துணை செயலாளர் இ.சி. சேகர், கோயம்பேடு நாடார் சங்க தலைவர் என்.ஆர்.பி.ஆதித்தன் உள்பட ஏராளமானவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    Next Story
    ×