என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  கோவை ரெயில் நிலையத்தில் போலீசார் தீவிர கண்காணிப்பு
  X

  கோவை ரெயில் நிலையத்தில் போலீசார் தீவிர கண்காணிப்பு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • ரெயில்வே போலீசார் மற்றும் ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் ரெயில் நிலையம் முழுவதும் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
  • பயணிகள் சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்பட்டனர்.

  கோவை:

  மத்திய அரசு கொண்டு வந்துள்ள அக்னிபாத் திட்டத்திற்கு நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில் போராட்டங்களும் நடைபெற்று வருகின்றது.

  தமிழகத்திலும் அக்னிபாத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடந்து வருகிறது. கோவையில் பல்வேறு அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

  பெரும்பாலான அமைப்புகள் ரெயில் மறியல் போராட்டத்தை அறிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுகின்றனர். அவர்களை ரெயில்வே போலீசார் மற்றும் ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் ரெயில் நிலையம் முன்பே தடுத்து நிறுத்தி வருகின்றனர்.

  ஆனால் நேற்றுமுன்தினம் மாணவர் அமைப்புகள் போராட்டத்தின் போது போலீசாருக்கு தெரியாமல் ரெயில் நிலையம் பின்புறமாக உள்ளே புகுந்து ரெயில் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

  இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அவர்களை குண்டு கட்டாக தூக்கி போலீசார் கைது செய்தனர். நேற்றும் ரெயில் மறியலுக்கு திரண்டவர்களை போலீசார் தடுத்து கைது செய்தனர்.

  இதையொட்டி ரெயில் நிலையத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணி குறித்து ரெயில் நிலையம் முன்பு ஆலோசனை நடத்தினர்.

  பின்னர் போராட்டக்காரர்கள் ரெயில் நிலையத்துக்குள் நுழையாதவாறு அனைத்து இடங்களிலும் பாதுகாப்பை பலப்படுத்த போலீசாருக்கு அறிவுறுத்தப்பட்டது.

  அதன்படி ரெயில்வே போலீசார் மற்றும் ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் ரெயில் நிலையம் முழுவதும் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். பயணிகள் சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்பட்டனர்.

  Next Story
  ×