என் மலர்
உள்ளூர் செய்திகள்

தஞ்சை அருகே ரவுடி கொலை
- தஞ்சை அருகே மாதாக்கோட்டை டான்போஸ்கோ தெருவை சேர்ந்தவர் பிரின்ஸ்லாரா என்கிற சின்னா.
- போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வல்லம்:
தஞ்சை அருகே மாதாக்கோட்டை டான்போஸ்கோ தெருவை சேர்ந்தவர் செபஸ்டின். இவரது மகன் பிரின்ஸ்லாரா என்கிற சின்னா (வயது 28). இவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளது. போலீசாரின் ரவுடி பட்டியலில் உள்ளார்.
இந்நிலையில் நேற்றிரவு திருக்கானூர்பட்டியில் உள்ள உறவினர் வீட்டுக்கு சாப்பிடுவதற்காக சின்னா வந்துள்ளார். இதனை அறிந்த மர்ம கும்பல் தஞ்சை- புதுக்கோட்டை சாலையில் சின்னாவை வழிமறித்து நிறுத்தினர். திடீரென சரமாரியாக சின்னாவை அரிவாளால் வெட்டி விட்டு தப்பி ஓடினர். இந்த தாக்குதலில் சின்னா பலத்த காயமடைந்தார்.
அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் சிகிச்சை பலனின்றி சின்னா உயிர் இழந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த வல்லம் துணை போலீஸ் சூப்பிரண்டு நித்யா, வல்லம் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்த தீவிர விசாரணை மேற்கொண்டனர். இது குறித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
முன் விரோதம் காரணமாக சின்னா கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்றும், கொலையாளிகளை பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது என்றும் போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவம் தஞ்சையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.






