search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நடுவழியில் இறக்கி விட்டதால் பஸ் மீது மாணவர்கள் கல்வீச்சு- கண்ணாடி உடைந்தது
    X

    நடுவழியில் இறக்கி விட்டதால் பஸ் மீது மாணவர்கள் கல்வீச்சு- கண்ணாடி உடைந்தது

    • அதிர்ஷ்டவசமாக பஸ்சில் இருந்த பயணிகளுக்கு காயம் ஏதும் ஏற்படவில்லை.
    • தகவல் அறிந்ததும் கே.கே நகர் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

    போரூர்:

    சென்னை பிராட்வேயில் இருந்து அய்யப்பன்தாங்கல் நோக்கி மாநகர பஸ் (எண் 26) நேற்று மாலை பயணிகளுடன் புறப்பட்டது. பஸ்சை டிரைவர் ஆண்டாள் பிள்ளை ஓட்டி வந்தார். பஸ்சில் கூட்டம் அதிகமாக இருந்தது. எனினும் 20-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் பஸ்சின் படிக்கட்டில் தொங்கியபடி அபாயகரமான முறையில் பயணம் செய்தனர்.

    இதனை பஸ் கண்டக்டர் செல்வகுமார் கண்டித்தார். ஆனால் மாணவர்கள் கண்டு கொள்ளாமல் தொடர்ந்து அதேபோல் தொங்கியபடி பயணம் செய்தனர். கே.கே நகர் ராஜமன்னார் சாலை பஸ் நிறுத்தத்தில் பஸ்சை நிறுத்திய கண்டக்டர் படிக்கட்டில் தொங்கிய மாணவர்கள் அனைவரையும் கீழே இறக்கி விட்டார். பஸ்சில் இருந்து நடுவழியில் கீழே இறக்கி விட்டதால் ஆத்திரமடைந்த மாணவர்கள் திடீரென பஸ்சின் மீது சரமாரி யாக கல்வீசி தாக்கினர்.

    இதில் பஸ்சின் பின்பக்க கண்ணாடி முழுவதும் உடைந்து நொறுங்கியது. அதிர்ஷ்டவசமாக பஸ்சில் இருந்த பயணிகளுக்கு காயம் ஏதும் ஏற்படவில்லை. தகவல் அறிந்ததும் கே.கே நகர் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். பஸ் மீது கல்வீசிவிட்டு தப்பி ஓடிய மாணவர்கள் குறித்து விசாரணை நடத்தி தேடி வருகின்றனர்.

    Next Story
    ×