என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திண்டுக்கல்லில் வாலிபரை கம்பியால் குத்தி கொல்ல முயன்ற போலீஸ் ஏட்டு
    X

    திண்டுக்கல்லில் வாலிபரை கம்பியால் குத்தி கொல்ல முயன்ற போலீஸ் ஏட்டு

    • வினோத்குமாருக்கும், ரம்யாவிற்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
    • பலத்த காயமடைந்த வினோத்குமார் திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் சீலப்பாடி அருகில் உள்ள மேற்கு குழிப்பட்டியை சேர்ந்தவர் நடராஜன் மகன் வினோத்குமார்(27). பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார். இவருக்கும், இவரது சகோதரி ரம்யாவிற்கும் இடையே சொத்து தகராறு இருந்து வருகிறது.

    இந்நிலையில் இன்று காலையில் வினோத்குமாருக்கும், ரம்யாவிற்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த ரம்யாவின் கணவர் பொன்ராஜ்(40) சென்ரிங் கட்ட பயன்படுத்தும் இரும்பு கம்பியால் வினோத்குமாரை சரமாரியாக குத்தினார். இதில் பலத்த காயமடைந்த வினோத்குமார் திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.

    இதுகுறித்து தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் பொன்ராஜிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இரும்பு கம்பியால் குத்தி கொல்ல முயன்ற பொன்ராஜ் கரூர் மாவட்டத்தில் மதுவிலக்கு பிரிவு போலீஸ் ஏட்டாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×