search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சென்னையில் தெருவோர வியாபாரிகளின் உணவு திருவிழா- அண்ணாநகரில் இன்று மாலை தொடங்குகிறது
    X

    சென்னையில் தெருவோர வியாபாரிகளின் உணவு திருவிழா- அண்ணாநகரில் இன்று மாலை தொடங்குகிறது

    • தெருவோர வியாபாரிகளுக்கு வங்கிகள் மூலம் ரூ.10 ஆயிரம் கடன் உதவி வழங்கப்படுகிறது.
    • சென்னையில் மட்டும் 1 லட்சத்து 12 ஆயிரத்து 613 பேர் இணையதளம் மூலம் கடனுதவி கேட்டு விண்ணப்பித்து உள்ளார்கள்.

    சென்னை:

    கையேந்திபவன் என்று அழைக்கப்படும் தெருவோர உணவுக் கடைகள் தான் பெரு நகரங்களில் பலருக்கு கை கொடுக்கிறது.

    மிகவும் நலிந்த நிலையில் ரோட்டோரங்களில் கடை நடத்தும் இவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த பிரதமர் மோடி பிரதமரின் ஸ்வாநிதி என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தினார்.

    இந்த திட்டத்தின் கீழ் தெருவோர வியாபாரிகளுக்கு வங்கிகள் மூலம் ரூ.10 ஆயிரம் கடன் உதவி வழங்கப்படுகிறது.

    சென்னையில் மட்டும் 1 லட்சத்து 12 ஆயிரத்து 613 பேர் இணையதளம் மூலம் கடனுதவி கேட்டு விண்ணப்பித்து உள்ளார்கள். அவர்களில் 58 ஆயிரத்து 93 பேருக்கு வங்கிகள் ஒப்புதல் அளித்து உள்ளது. இதுவரை 45 ஆயிரத்து 834 பேருக்கு கடன் உதவி வழங்கப்பட்டு உள்ளது.

    தெருவோர வியாபாரிகளை ஊக்குவிக்கும் வகையில் மத்திய அரசுடன் தமிழக அரசு மற்றும் சென்னை மாநகராட்சி இணைந்து சிறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளது.

    இதன்படி அண்ணா நகர் 6-வது நிழற்சாலை, போகென் வில்லா பூங்கா அருகில் இன்று மாலையில் கலாச்சார நிகழ்ச்சியும், உணவு திருவிழாவும் நடத்தப்படுகிறது. மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் சாலையோர வியாபாரிகளின் உணவுத் திருவிழாவுக்காக உணவுக் கடைகள், வங்கிகள் கடன் வழங்குவதற்காக ஸ்டால்கள், உணவு பாதுகாப்புத் துறையினரால் வழங்கப்படும் உணவு சான்றிதழ் குறித்து விழிப்புணர்வுக்கான ஸ்டால், சாலையோர வியாபாரிகள் தங்கள் வியாபாரத்தினை டிஜிட்டல் மூலம் மேற்கொள்வதனால் பெறப்படும் பயன்கள் குறித்து பே.டி.எம். நிறுவனத்தினர் விழிப்புணர்வுக்கான ஸ்டால், மகளிர் சுய உதவிக் குழுவினரால் தயாரிக்கப்பட்ட அலங்கார பொருட்களின் கண்காட்சி மற்றும் விற்பனை மேற்கொள்வதற்காக ஸ்டால்கள் என மொத்தம் 50 ஸ்டால்கள் அமைக்கப்பட உள்ளது. வியாபாரிகள் குடும்பத்துடன் கலந்து கொள்கிறார்கள்.

    விழாவில் 200 பேருக்கு வங்கி கடன் உதவி வழங்கப்படுகிறது.

    விழாவில் மத்திய இணை மந்திரி எல்.முருகன், அமைச்சர் கே.என்.நேரு ஆகியோர் கலந்து கொண்டு தெருவோர வியாபாரிகளுக்கான கண்காட்சியினை திறந்து வைத்து வங்கி கடனுதவிகளை வழங்கி சிறப்புரையாற்றுகிறார்கள்.

    மேலும் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர் பாபு, மேயர் பிரியா, தயாநிதி மாறன் எம்.பி., எம்.கே.மோகன் எம்.எல்.ஏ. துணை மேயர் மு.மகேஷ் குமார் உள்பட பலர் கலந்து கொள்கிறார்கள்.

    Next Story
    ×