என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பெரும்பாக்கம் அருகே 10-ம் வகுப்பு மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை
    X

    பெரும்பாக்கம் அருகே 10-ம் வகுப்பு மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை

    • சுதீப் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • பெரும்பாக்கம் போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.

    பெரும்பாக்கம் அருகே உள்ள சித்தாலப்பாக்கம், ஏரிக்கரை தெருவை சேர்ந்தவர் முருகன். இவர் பொன்மாரில் உள்ள சாலையோர கடையில் பரோட்டா மாஸ்டராக வேலை செய்து வருகிறார்.இவரது மகன் சுதீப்(வயது15).அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு குடும்ப தகராறில் முருகனை பிரிந்து அவரது மனைவி சென்று விட்டார். வீட்டில் முருகனும், அவரது மகன் சுதீப் மட்டும் இருந்தனர்.

    அப்போது முருகன், நான் சரியாக படிக்காததால் சாலையோர கடையில் பரோட்டா மாஸ்டராக வேலை செய்கிறேன். நீயாவது படித்து முன்னுக்கு வா. ஊர்சுற்றாதே? என்று மகன் சுதீப்புக்கு அறிவுரை கூறி கண்டித்தார். இதில் மனவேதனை அடைந்த சுதீப் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.இதுகுறித்து பெரும்பாக்கம் போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.

    Next Story
    ×