என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    உத்திரமேரூரில் பஸ்சை சிறைபிடித்து பயணிகள் போராட்டம்
    X

    உத்திரமேரூரில் பஸ்சை சிறைபிடித்து பயணிகள் போராட்டம்

    • பணிமனையில் இருந்து அதிகாலை 5 மணி அளவில் வரும் முதல் பஸ் உத்திரமேரூர் பஸ்நிலையத்தில் இருந்து சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட பகுதிகளுக்கு இயக்கப்படும்.
    • பயணம் செய்யும் மாணவ-மாணவிகள் மற்றும் பொதுமக்கள் குறித்த நேரத்திற்கு செல்ல முடியாமல் கடும் அவதி அடைந்து வருகிறார்கள்.

    காஞ்சிபுரம்:

    உத்திரமேரூரில் அரசு போக்குவரத்து பணிமனை செயல்பட்டு வருகிறது. இந்த பணிமனையில் இருந்து செங்கல்பட்டு, சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதில் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை, தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு வேலைக்கு செல்வோர், பள்ளி கல்லூரிக்கு செல்லும் மாணவ -மாணவிகள் செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு செல்லும் நோயாளிகள் அதிகம் பயணம் செய்து வருகிறார்கள்.

    பணிமனையில் இருந்து அதிகாலை 5 மணி அளவில் வரும் முதல் பஸ் உத்திரமேரூர் பஸ்நிலையத்தில் இருந்து சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட பகுதிகளுக்கு இயக்கப்படும். ஆனால் கடந்த சில நாட்களாக இந்த பஸ் தாமதமாக இயக்கப்பட்டு வருகிறது. இதனால் அதில் பயணம் செய்யும் மாணவ-மாணவிகள் மற்றும் பொதுமக்கள் குறித்த நேரத்திற்கு செல்ல முடியாமல் கடும் அவதி அடைந்து வருகிறார்கள்.

    இந்நிலையில் இன்று அதிகாலை முதலே சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் பஸ்கள் காலை 7 மணி வரை இயக்கப்படவில்லை. இதனால் செங்கல்பட்டு, சென்னை தாம்பரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள் மற்றும் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ -மாணவிகள் தவித்தனர். காலை 7.20 மணியளவில் முதல் பஸ் பணிமனையில் இருந்து உத்திரமேரூர் பஸ் நிலையத்திற்கு வந்தது. இதனால் ஆத்திரம் அடைந்த பயணிகள் பஸ்சை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் டிரைவர், கண்டக்டரிடம் கடும் வாக்குவாதம் செய்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    Next Story
    ×