என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருவேற்காடு நகராட்சியில் தூய்மைப் பணியில் பங்கேற்றவர்களுக்கு பாராட்டு
    X

    திருவேற்காடு நகராட்சியில் தூய்மைப் பணியில் பங்கேற்றவர்களுக்கு பாராட்டு

    • திருவேற்காடு நகராட்சியில் நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம் சார்பில் நடைபெற்ற பல்வேறு தூய்மைப் பணிகள், விழிப்புணர்வு நிகழ்ச்சி.
    • நகர்மன்ற அலுவலக வளாகத்தில் சிறப்பு மருத்துவ முகாம் நடை பெற்றது.

    பூந்தமல்லி:

    திருவேற்காடு நகராட்சியில் நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம் சார்பில் நடைபெற்ற பல்வேறு தூய்மைப் பணிகள், விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் பங்கேற்று சிறப்பாக செயல்பட்டவர்களுக்கு பாராட்டு விழா நகர்மன்ற தலைவர் என்.இ.கே. மூர்த்தி தலைமையில் நடைபெற்றது.

    இதில் நகர்மன்ற துணைத் தலைவர் ஆனந்தி ரமேஷ், ஆணையர் ரமேஷ், பொறியாளர் குமார், சுகாதார ஆய்வாளர் வெங்கடேசன், நகர்மன்ற உறுப்பினர்கள், குடியிருப்போர் நலச் சங்கத்தினர், தன்னார்வலர்கள், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    இதில் நகராட்சி சார்பில் குப்பைகள் அகற்றுதல், நீர்நிலைகளை தூர்வாறுதல், மரம் நடுதல், பிளாஸ்டிக் ஒழிப்பு, மழைநீர் வடிகால் மற்றும் கால்வாய்கள் சீரமைத்து சுத்தம் செய்தல், இயற்கை உரம் விற்பனை, குப்பைகளை தரம் பிரித்து வழங்குதல், மஞ்சப்பை பயன்படுத்துவது, வாகனங்கள் மூலம் பிரசாரம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. நிகழ்ச்சியில் குடியிருப்போர் நலச் சங்கத்தினர், தன்னார்வலர்கள், நகராட்சி பணியாளர்கள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினர் ஆர்வத்துடன் பங்கேற்றனர். இதனால் திருவேற்காடு நகராட்சி குப்பையில்லாத சுத்தமான நகரமாக மாறுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதில் பங்கேற்றவர்களை ஊக்குவிக்கும் விதமாக பாராட்டு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்று சிறப்பாக செயலாற்றியவர்களை பாராட்டி நகர்மன்ற தலைவர் என். இ.கே. மூர்த்தி பரிசும், சான்றிதழும் வழங்கினார்.இதைத் தொடர்ந்து நகர்மன்ற அலுவலக வளாகத்தில் சிறப்பு மருத்துவ முகாம் நடை பெற்றது.

    Next Story
    ×