என் மலர்
உள்ளூர் செய்திகள்

அண்ணா பல்கலைக்கழக ஆட்சிக்குழு உறுப்பினராக பரந்தாமன் எம்.எல்.ஏ. நியமனம்
- அண்ணா பல்கலைக்கழக ஆட்சிக் குழு உறுப்பினராக எழும்பூர் சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ. இ.பரந்தாமன் நியமிக்கப்பட்டார்.
- தேர்ந்து எடுக்கப்பட்ட ஆட்சி குழு உறுப்பினரின் பதவிக் காலம் 12.9.2024 வரை ஆகும்.
சென்னை:
அண்ணா பல்கலைக்கழக ஆட்சிக் குழு உறுப்பினராக எழும்பூர் சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ. இ.பரந்தாமன் நியமிக்கப்பட்டார். சட்டமன்ற உறுப்பினர்களில் இருந்து ஒருவரை அண்ணா பல்கலைக்கழகத்திற்கு ஆட்சி குழு உறுப்பினராக நியமனம் செய்வது வழக்கம். அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் வேல்ராஜ் கொடுத்த கடிதத்தின் அடிப்படையில் இ.பரந்தாமன் எம்.எல்.ஏ. முறையாக தேர்ந்து எடுக்கப்பட்டதாக சட்ட பேரவை செயலாளர் சீனிவாசன் தெரிவித்தார். தேர்ந்து எடுக்கப்பட்ட ஆட்சி குழு உறுப்பினரின் பதவிக் காலம் 12.9.2024 வரை ஆகும்.
Next Story