என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பணகுடி அருகே வீடு புகுந்து 26 பவுன் நகை-பணம் கொள்ளை
    X

    பணகுடி அருகே வீடு புகுந்து 26 பவுன் நகை-பணம் கொள்ளை

    • நகைகள் மற்றும் ரொக்கப்பணம் கொள்ளை போயிருந்தது தெரியவந்தது.
    • வீட்டில் ஆள் இல்லாததை அறிந்து கொண்டு மர்ம நபர்கள் கைவரிசை காட்டி இருக்கலாம் என போலீசார் கருதுகிறார்கள்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் பணகுடி அருகே உள்ள கண்ணன் குளம் பாரதி நகரை சேர்ந்தவர் மணி கண்டன். இவரது மனைவி பவித்ரா (வயது25).

    மணிகண்டன் பொக்லைன் ஆபரேட்டராக பணியாற்றி வருகிறார். கடந்த 22-ந்தேதி இவர் ஒரு விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தார். உடனே அப்பகுதி பொதுமக்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு மணி கண்டனுக்கு முக அறுவை சிகிச்சைக்கான ஏற்பாடுகள் நடைபெற்று உள்ளது.

    இதற்காக பணம் தேவை ஏற்பட்டதால் பவித்ரா வீட்டில் இருக்கும் நகைகளை அடகு வைப்பதற்காக எடுக்க வந்தார். அப்போது வீட்டில் இருந்த 27 பவுன் நகைகள் மற்றும் ரூ.11 ஆயிரம் ரொக்கப்பணம் கொள்ளை போயிருந்தது தெரியவந்தது.

    இதனால் அதிர்ச்சியடைந்த பவித்ரா இதுபற்றி பழவூர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) அஜித்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத் திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

    மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது.

    வீட்டில் ஆள் இல்லாததை அறிந்து கொண்டு மர்ம நபர்கள் கைவரிசை காட்டி இருக்கலாம் என போலீசார் கருதுகிறார்கள். அதன் பேரில் பழைய குற்றவாளிகளின் பட்டியலை சேகரித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    Next Story
    ×