என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  பழனியில் ஓய்வு பெற்ற அதிகாரி வீட்டில் 20 பவுன் நகை கொள்ளை
  X

  பழனியில் ஓய்வு பெற்ற அதிகாரி வீட்டில் 20 பவுன் நகை கொள்ளை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • வீட்டில் பீரோவில் இருந்த பொருட்கள் அனைத்தும் சிதறி கிடந்தன. பீரோவில் இருந்த 20 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது.
  • பொருத்தப்பட்டு இருந்த சி.சி.டி.வி கேமராக்கள் உதவியுடன் கொள்ளையர்கள் உருவம் பதிவாகியுள்ளதா என்றும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

  பழனி:

  பழனி சண்முகபுரம் அண்ணாநகரைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் (வயது 65). இவர் ஓய்வு பெற்ற மின் வாரிய அதிகாரி. இவர் தனது மனைவி மற்றும் குடும்பத்துடன் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வெளியூர் சென்று விட்டார். இந்நிலையில் அவரது வீட்டின் கதவு மற்றும் ஜன்னலை உடைத்து மர்ம நபர்கள் உள்ளே புகுந்தனர்.

  இன்று காலை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் இது குறித்து பாலசுப்பிரமணியனுக்கு தகவல் தெரிவித்தனர். மேலும் பழனி டவுன் போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அவரது வீட்டில் பீரோவில் இருந்த பொருட்கள் அனைத்தும் சிதறி கிடந்தன. பீரோவில் இருந்த 20 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது.

  இதனையடுத்து தடயவியல் நிபுணர்கள் வீட்டில் பதிவாகி இருந்த கைரேகைகளை பதிவு செய்தனர். மேலும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டும் விசாரணை நடத்தப்பட்டது. அப்பகுதியில் பொருத்தப்பட்டு இருந்த சி.சி.டி.வி கேமராக்கள் உதவியுடன் கொள்ளையர்கள் உருவம் பதிவாகியுள்ளதா என்றும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

  பழனி மற்றும் புறநகர் பகுதிகளில் அவ்வப்போது தொடர்ந்து திருட்டு மற்றும் கொள்ளை சம்பவங்கள் நடந்து வருவது பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

  Next Story
  ×