என் மலர்
உள்ளூர் செய்திகள்

வேலைக்கு செல்லாததை தாய் கண்டித்ததால் வாலிபர் தற்கொலை
- மனவேதனை அடைந்த ஹரிஹரன் வீட்டில் உள்ள அறையில் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
- மணிமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
படப்பை அருகே உள்ள ஆதனூர் டி.டி.சி. நகரை சேர்ந்தவர் செல்வி. கணவரை இழந்த அவர், அதே பகுதியில் டிபன் கடை நடத்தி வருகிறார். இவரது மகன் ஹரிஹரன் (வயது 25). வேலைக்கு செல்லாமல் நண்பர்களுடன் சுற்றி வந்தார். இதனை தாய் செல்வி கண்டித்தார். இதில் மனவேதனை அடைந்த ஹரிஹரன் வீட்டில் உள்ள அறையில் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து மணிமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story






