என் மலர்
உள்ளூர் செய்திகள்

குற்றாலம் மெயின் அருவியில் பெண்கள் மட்டும் குளிக்க அனுமதி
- கொரோனா பரவல் குறைந்ததை அடுத்து இந்த ஆண்டு கார்த்திகை மாதம் சோமவாரம் மேற்கொள்ளும் பெண்களுக்கு இன்று காலை முதல் குற்றாலம் அருவியில் குளிக்க அனுமதி வழங்கப்பட்டது.
- அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான பெண்கள் குற்றால அருவியில் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
தென்காசி:
கொரோனா நோய் தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக தென்காசி மாவட்டம் குற்றால அருவிப்பகுதிகளில் கார்த்திகை மாதத்தில் சோமவாரம் கடைபிடிக்கும் பெண்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் கொரோனா பரவல் குறைந்ததை அடுத்து இந்த ஆண்டு கார்த்திகை மாதம் சோமவாரம் மேற்கொள்ளும் பெண்களுக்கு இன்று காலை முதல் குற்றாலம் அருவியில் குளிக்க அனுமதி வழங்கப்பட்டது. அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான பெண்கள் குற்றால அருவியில் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
Next Story