என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தீபாவளி பண்டிகையையொட்டி கடை வீதிகளில் கூட்டம்-  1000 போலீசார் பாதுகாப்பு
    X

    தீபாவளி பண்டிகையையொட்டி கடை வீதிகளில் கூட்டம்- 1000 போலீசார் பாதுகாப்பு

    • திருவள்ளூர் பஸ் நிலையம் ரெயில் நிலையம் பஜார் வீதி போன்ற பகுதிகளிலும் மக்கள் கூட்டம் அதிக அளவில் உள்ளது.
    • திருத்தணி, ஊத்துக்கோட்டை, கடம்பத்தூர், பேரம்பாக்கம், கும்மிடிப்பூண்டி, பொன்னேரி போன்ற பகுதிகளிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    திருவள்ளூர்:

    தீபாவளி பண்டிகை நாளை உற்சாகமாக கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி பொது மக்கள் புத்தாடைகள் மற்றும் பொருட்கள் வாங்குவதற்காக திருவள்ளூர் நகர பகுதிக்கு வந்த வண்ணம் உள்ளனர்.

    இதன் காரணமாக திருவள்ளூர் பஸ் நிலையம் ரெயில் நிலையம் பஜார் வீதி போன்ற பகுதிகளிலும் மக்கள் கூட்டம் அதிக அளவில் உள்ளது.

    இதைத் தொடர்ந்து மாவட்ட காவல் துறை சார்பில் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டு உள்ளன.

    அதன்படி திருவள்ளூர் நகரில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் 3 கண் காணிப்பு கோபுரம் அமைக்கப்பட்டு அதில் 24 மணி நேரமும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் குற்றவாளி முகத்தை அடையாளம் காட்டும் எப்.ஆர்.எஸ். செயலியை பயன்படுத்தி வருகின்றனர்.

    திருத்தணி, ஊத்துக்கோட்டை, கடம்பத்தூர், பேரம்பாக்கம், கும்மிடிப்பூண்டி, பொன்னேரி போன்ற பகுதிகளிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மாவட்டம் முழுவதும் போலீஸ் சூப்பிரண்டு சீபாஸ் கல்யாண் உத்தரவின்பேரில் 2 கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள், 5 துணை போலீஸ் சூப்பிரண்டுகள், 24 இன்ஸ்பெக்டர்கள் உட்பட 1000-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    Next Story
    ×