என் மலர்
உள்ளூர் செய்திகள்

மாமல்லபுரத்தில் ஓட்டலில் சமைக்க இருந்த கெட்டுப்போன இறைச்சி பறிமுதல்- அதிகாரிகள் நடவடிக்கை
- சுகாதாரமற்ற இறைச்சிகளை உணவுக்கு பயன்படுத்தினால் ஓட்டல் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
- உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள் விஜயன், அமுதா, சுகாதார ஆய்வாளர் ரகுபதி உள்ளிட்டோர் ஓட்டல், இறைச்சி கடைகளில் சோதணை.
மாமல்லபுரம்:
மாமல்லபுரத்தில் ஜூலை28-ந்தேதி முதல் ஆகஸ்ட்10-ந்தேதி வரை, 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறஉள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.
இதன் பணிகளை ஆய்வு செய்யவும், மாமல்லபுரம் நகரத்தின் தூய்மை, சுத்தம், சுகாதாரம், உணவு, பாதுகாப்பு, மருத்துவம், அழகுபடுத்துதல் போன்ற மேம்பாட்டு பணிகள் குறித்து பார்வையிடவும் அவ்வப்போது அதிகாரிகள் வந்து செல்கிறார்கள்.
இந்த நிலையில் உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள் விஜயன், அமுதா, சுகாதார ஆய்வாளர் ரகுபதி உள்ளிட்டோர் திடீரென மாமல்லபுரத்தில் உள்ள ஓட்டல், இறைச்சி கடைகளில் சோதணை செய்தனர்.
இதில் கோவளம் சாலையில் உள்ள ஓட்டல் ஒன்றில் கெட்டுப்போன 60கிலோ மாட்டு இறைச்சி மற்றும் 25கிலோ கோழி இறைச்சியை சமையலுக்கு வைத்திருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. அதனை அதிகாரிகள் பறிமுதல் செய்து குப்பை கிடங்கில் போட்டு அழித்தனர்.
சுகாதாரமற்ற இறைச்சிகளை உணவுக்கு பயன்படுத்தினால் ஓட்டல் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் எச்சரித்து உள்ளனர்.






