என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருவள்ளூர் மாவட்டத்தில் விநாயகர் சிலைகளை கரைக்க 17 இடங்கள் அறிவிப்பு
    X

    திருவள்ளூர் மாவட்டத்தில் விநாயகர் சிலைகளை கரைக்க 17 இடங்கள் அறிவிப்பு

    • விநாயர் சதுர்த்தி விழா வருகிற 31-ந்தேதி கொண்டாடப்படுகிறது.
    • திருவள்ளூர் காக்களூர் ஏரி, சீமாவரம் கொசத்தலையாறு ஆகிய 17 இடங்களில் மட்டுமே விநாயகர் சிலைகளை விதிமுறைகள் படி கரைக்க வேண்டும்.

    திருவள்ளூர்:

    விநாயர் சதுர்த்தி விழா வருகிற 31-ந்தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி திருவள்ளூர் மாவட்டத்தில் பொது இடங்களில் வழிபாட்டுக்கு வைக்கப்படும் சிலைகளை 17 இடங்களில் கரைக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

    இது தொடர்பாக திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் வெளியிட்டு உள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    திருவள்ளூர் மாவட்டத்தில் வருகின்ற 31-ந் தேதி (புதன்கிழமை) விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட உள்ளது. அதை தொடர்ந்து விநாயகர் சிலைகளை மாவட்ட நிர்வாகத்தினால் குறிப்பிடப்பட்டுள்ள இடங்களில் மட்டுமே தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியத்தின் விதிமுறைகளின் படி கரைக்க அனுமதிக்கப்படும்.

    திருவள்ளூர் புட்லூர் ஏரி, எம்.ஜி.ஆர். நகர் ஏரி, மப்பேடு கூவம் ஈசா ஏரி, திருமழிசை, வெள்ளவேடு, ஊத்துக்கோட்டை குளம், ஊத்துக்கோட்டை சித்தேரி, ஊத்துக்கோட்டை கொசஸ்தலையாறு, திருத்தணி காந்தி ரோடு குளம், ஆர்.கே பேட்டை வண்ணான் குளம்.

    பள்ளிப்பட்டு கரிம்பேடு குளம், பொதட்டூர்பேட்டை பாண்டரமேடு ஏரி, திருத்தணி பராசக்தி நகர் குளம், கனகம்மா சத்திரம் குளம்,திருப்பாலைவனம் புலிகாட் ஏரி, கும்மிடிப்பூண்டி ஏழுகண் பாலம், பக்கிங்காம் கால்வாய், திருவள்ளூர் காக்களூர் ஏரி, சீமாவரம் கொசத்தலையாறு ஆகிய 17 இடங்களில் மட்டுமே விநாயகர் சிலைகளை விதிமுறைகள் படி கரைக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    Next Story
    ×