என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  சினிமா ஆசைகாட்டி ஆபாசபடம் எடுத்த இயக்குனர் வேல்சத்ரியன் மீது புகார்கள் குவிகிறது
  X

  இயக்குனர் வேல்சத்ரியன்


  சினிமா ஆசைகாட்டி ஆபாசபடம் எடுத்த இயக்குனர் வேல்சத்ரியன் மீது புகார்கள் குவிகிறது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • வேல்சத்ரியன் 300-க்கும் மேற்பட்ட இளம்பெண்களை ஆபாச படம் எடுத்து மிரட்டி உள்ளார்.
  • சேலம், கோவை, திருப்பூர், கள்ளக்குறிச்சி என பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த இளம்பெண்கள் அவரிடம் ஏமாந்து இருப்பது தெரியவந்துள்ளது.

  சேலம்:

  சேலம் ஏ.வி.ஆர்.ரவுண்டானா பகுதியில் தனியார் கட்டிடத்தில் இயங்கி வந்த சினிமா கம்பெனியில் வேலை பார்த்து வந்த சேலம் இரும்பாலையை சேர்ந்த இளம்பெண் ஒருவர், சேலம் மாவட்டம் எடப்பாடி வீரப்பன்பாளையத்தை சேர்ந்த இயக்குனர் வேல்சத்ரியன் (வயது 38), இவரது பெண் உதவியாளர் ராஜபாளையத்தை சேர்ந்த ஜெயஜோதி (23) ஆகியோர் மீது சூரமங்கலம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் பரபரப்பு புகார் கொடுத்தார்.

  அதில் செல்போனை பறித்துக்கொண்டு மிரட்டுவதாகவும், பல இளம்பெண்களை வைத்து ஆபாசமாக படம் எடுத்து மிரட்டி சீரழிப்பதாகவும் புகார் கொடுத்தார்.

  இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. வேல்சத்திரியன் புதிதாக 'நோ' என்ற பெயரில் சினிமா படம் எடுப்பதற்கு துணை நடிகை தேவை என்று சமூக வலைத்தளங்களில் விளம்பரப்படுத்தினார். இதனால் அவரை நம்பி ஏராளமான பெண்கள் சினிமா வாய்ப்பு தேடி வந்தனர்.

  அப்போது அவர்களிடம் வேல்சத்ரியன், நான் உங்களை பெரிய நடிகை போல் ஆக்குகிறேன் என்று ஆசைவார்த்தை கூறி அவர்களை பல்வேறு கோணங்களில் ஆபாசமாக படம் எடுத்துள்ளார் என்பது தெரியவந்தது.

  இதையடுத்து சேலத்தில் உள்ள வேல்சத்ரியன் சினிமா நிறுவனத்தில் இருந்து 30-க்கும் மேற்பட்ட ஹார்ட் டிஸ்குகள், கணினிகள் மடிக்கணினிகள், கேமரா, பென்டிரைவ் உள்ளிட்டவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இவை ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

  வேல்சத்ரியன் 300-க்கும் மேற்பட்ட இளம்பெண்களை ஆபாச படம் எடுத்து மிரட்டி உள்ளார். இதில் சேலம், கோவை, திருப்பூர், கள்ளக்குறிச்சி என பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த இளம்பெண்கள் அவரிடம் ஏமாந்து இருப்பது தெரியவந்துள்ளது.

  இதையடுத்து போலீசார், வேல் சத்ரியன், ஜெயஜோதி ஆகியோரை கைது செய்தனர். பின்னர் 2 பேரையும் போலீசார் ஜெயிலில் அடைத்தனர்.

  பாதிக்கப்பட்ட பெண்கள் ரகசியமாக போலீஸ் நிலையம் வந்து எழுத்துப்பூர்வமாக புகார் கொடுத்து செல்கின்றனர். இதைத்தவிர 20-க்கும் மேற்பட்ட பெண்கள் சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கமிஷனர் நஜ்முல் ஹோதாவிடம் கண்ணீர் மல்க புகார் கொடுத்துள்ளனர்.

  மேலும் பல பெண்கள் ஆன்லைன் வழியாகவும் புகார்கள் கொடுத்து வருகிறார்கள். இதனால் இயக்குனர் வேல்சத்திரியன் மீது ஏராளமான புகார்கள் குவிகிறது. இதனை தொடர்ந்து ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள வேல் சத்ரியன், ஜெயஜோதி ஆகியோரை காவலில் எடுத்து விசாரிப்பதற்கான நடவடிக்கைகளை போலீஸ் அதிகாரிகள் எடுத்து வருகின்றனர்.

  Next Story
  ×