என் மலர்
உள்ளூர் செய்திகள்

நந்தம்பாக்கத்தில் உலகத்தமிழ் வம்சாவளியினர் மாநாடு தொடங்கியது- அமைச்சர்கள் பங்கேற்பு
- நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் 9-ம் ஆண்டு உலகத்தமிழ் வம்சாவளியினர் மாநாடு இன்று தொடங்கியது.
- வடஅமெரிக்க தமிழ் சங்க தலைவர் டாக்டர் ஜானகிராமன், வி.ஐ.டி.பல்கலைக்கழக வேந்தர் விஸ்வநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
போரூர்:
சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் 9-ம் ஆண்டு உலகத்தமிழ் வம்சாவளியினர் மாநாடு இன்று தொடங்கியது. அமைச்சர்கள் செஞ்சி மஸ்தான், தா.மோ. அன்பரசன் பங்கேற்றனர். உலக தமிழ் வர்த்தக சங்க தலைவர் செல்வக்குமார் வரவேற்றார்.
இதில் இலங்கை முன்னாள் முதல் அமைச்சரும் எம்.பி.யுமான விக்னேஸ்வரன், இலங்கை முன்னாள் அமைச்சர் ராதாகிருஷ்ணன், மலேசியா நாட்டின் எம்.எஸ்.எம்.இ. துறை அமைச்சர் சரஸ்வதி கந்தசாமி, மலேசியா நாட்டின் எம்.பி.கேசவன், வடஅமெரிக்க தமிழ் சங்க தலைவர் டாக்டர் ஜானகிராமன், வி.ஐ.டி.பல்கலைக்கழக வேந்தர் விஸ்வநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Next Story






