என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவையில் கட்டுமானம் மற்றும் மனைதொழில் கூட்டமைப்பு மாநாடு- அமைச்சர் முத்துசாமி பங்கேற்பு
    X

    கோவையில் கட்டுமானம் மற்றும் மனைதொழில் கூட்டமைப்பு மாநாடு- அமைச்சர் முத்துசாமி பங்கேற்பு

    • பல ஆண்டுகளாக உள்ள பிரச்சனை குறித்து முடிவு எடுக்கப்படும். துறையின் மூலம் 60 குடியிருப்புகள், சுமார் 10 ஆயிரம் வீடுகள் புதிதாக கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
    • கட்டிடங்கள் கட்ட 4 ஆயிரம் அடி என்பது 10 ஆயிரம் அடியாக பஞ்சாயத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டது.

    கோவை:

    கோவை கொடிசியாவில் கட்டுமானம் மற்றும் மனைத் தொழில் கூட்டமைப்பின் கோவை மாவட்ட மாநாடு நடந்தது.

    மாநாட்டிற்கு கூட்டமைப்பின் மாநிலத் துணை பொதுச்செயலாளர் ஸ்ரீதர் ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். வரவேற்பு குழு செயலாளர் என்ஜினீயர் ராஜதுரை வரவேற்றார். வரவேற்பு குழு பொருளாளர் என்ஜினீயர் கணேசன் முன்னிலை வகித்தார். மாநாட்டை கூட்டமைப்பின் தலைவரும் கட்டுமான தொழிலாளர் நல வாரியத்தின் தலைவர் பொன் குமார் துவக்கி வைத்தார்.

    மாநாட்டில் சிறப்பு விருந்தினராக வீட்டு வசதி துறை அமைச்சர் எஸ்.முத்துசாமி கலந்து கொண்டார். விழாவில் அவர் பேசியதாவது:-

    கட்டுமான தொழில் மேம்பாடு தொடர்பாக அனைத்து கட்டுமான இன்ஜினியரிங், ஆர்க்கி டெக்சர்களை அழைத்து கூட்டம் போட முடிவு செய்து உள்ளோம்.

    இதில் பல ஆண்டுகளாக உள்ள பிரச்சனை குறித்து முடிவு எடுக்கப்படும். துறையின் மூலம் 60 குடியிருப்புகள், சுமார் 10 ஆயிரம் வீடுகள் புதிதாக கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    ஒற்றை சாளர முறைப்படி வரைபட அனுமதி 60 நாட்களில் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதில் தற்போது 70 சதவீதம் ஒழுங்கு செய்யப்பட்டது. பழைய மனைகள் வரன்முறைப்படுத்த 6 மாதம் கால அவகாசம் அளிக்கலாம். நத்தம் பட்டா பொறுத்தவரை அதனை சார்ந்தவர்களுக்கு உரிமை அளிக்க வேண்டும் என அரசு உறுதியாக உள்ளது. ஹாக்கா சட்டத்தில் வன எல்லையில் இருந்து 150மீ என வரையறை வைக்கலாம் என மாவட்ட கலெக்டர்களிடம் அனுப்பி பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. அவர்களின் பரிந்துரையின்படி நடவடிக்கை எடுக்கப்படும். வரைபடம் கையொப்பமிடும் ஒரு இடத்தில் பொருந்தும் என ஊராட்சி, பேரூராட்சி ஏற்றுக் கொள்ள நடைமுறை கொண்டு வரப்படும். அனுமதியின்றி கட்டிடம் கட்டினால் ஆர்கிடெக், இன்ஜினியரிங் தான் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

    கட்டிடங்கள் கட்ட 4 ஆயிரம் அடி என்பது 10 ஆயிரம் அடியாக பஞ்சாயத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டது. மாவட்ட அளவில் 25 ஆயிரம் சதுர அடிவரை அனுமதி அளிக்கப்பட்ட நிலையில் 40 ஆயிரம் பில்டிங் உரிமை அளிக்கப்படுகிறது. டவுன் பகுதியில் 2.5 ஏக்கர் என்பது 5 ஏக்கர் எனவும், கிராம பகுதிகளில் 5 ஏக்கர் இருந்து 10 ஏக்கர் அளிக்கப்பட்டு உள்ளது. திமுக ஆட்சி வந்த பிறகு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. நிலத்தை வரைமுறை படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பிளானிங் அப்ரூவல் வாங்கி அடிப்படையில் மட்டுமே கட்டிடங்கள் கட்ட வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இதில், கட்டுமான தொழில் சார்ந்த அமைப்புகளான கிரடாய் பி.ஏ.ஐ இன்ஜினீயர் அசோசியேஷன் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் பிரதிநிதிகள் இந்த மாநாட்டில் கலந்து கொண்டனர். முதல் அமைச்சரால் அறிவிக்கப்பட்டுள்ள சலுகைகளுக்கு அவருக்கு இந்த மாநாட்டில் நன்றி தெரிவிக்கப்பட்டது. இதில் செயலாளர் வி.என்.கண்ணன், யுவராஜ், பொருளாளர் ஜெகதீஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    மாநாட்டில் அமைச்சரிடம் 28 கோரிக்கைகள் வைக்கப்பட்டன. இந்த கோரிக்கைகளில் 80 சதவீதம் கோரிக்கை ஏற்றுக் கொள்ளப்படும் என அமைச்சர் கூறியதாக மாநில தலைவர் பொன்குமார் தெரிவித்தார்.

    Next Story
    ×