என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    முத்தியால்பேட்டையில் எம்.ஜி.ஆர். படத்திற்கு முத்தியால்பேட்டை ஆர்.வி.ரஞ்சித்குமார் மலர் தூவி மரியாதை
    X

    முத்தியால்பேட்டையில் எம்.ஜி.ஆர். படத்திற்கு முத்தியால்பேட்டை ஆர்.வி.ரஞ்சித்குமார் மலர் தூவி மரியாதை

    • எம்ஜிஆரின் பொற்கால ஆட்சியில் மக்களுக்காக பல அறிய திட்டங்களை தீட்டினார்.
    • மக்கள் இதயத்தில் நீங்கா இடம் பெற்றவர் முன்னாள் முதல்வர் மக்கள் திலகம் எம்ஜிஆர்.

    அ.தி. மு.க. நிறுவனர் முன்னாள் முதல் - அமைச்சர் எம்ஜிஆரின் 35 வது ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு தமிழகம் எங்கும் எம்ஜிஆரின் படத்திற்கு அதிமுகவினர் மரியாதை செலுத்தினார்கள்.

    காஞ்சிபுரம் முத்தியால்பேட்டை ஊராட்சி அருகே வண்ண வண்ண மலர்களை கொண்டு எம்ஜிஆர் படம் அலங்கரிக்கப்பட்டு இருந்தது அந்த படத்திற்கு காஞ்சிபுரம் மாவட்ட அ.தி.மு.க.ஓ.பி.எஸ். அணி செயலாளர் தொழிலதிபர் முத்தியால்பேட்டை ஆர்.வி.ரஞ்சித் குமார் மலர் தூவி வணங்கினார். அவர் பேசுகையில், என்றைக்கும் எம்ஜிஆரை மக்கள் நினைவு கூர்ந்து வருகின்றனர்

    எம்ஜிஆரின் பொற்கால ஆட்சியில் மக்களுக்காக பல அறிய திட்டங்களை தீட்டினார். மக்கள் இதயத்தில் நீங்கா இடம் பெற்றவர் முன்னாள் முதல்வர் மக்கள் திலகம் எம்ஜிஆர்.

    சத்துணவு திட்டத்தை மிகச் சிறப்பாக செயல்படுத்திய ஒரே முதல்வர் எம்ஜிஆர் தான். வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி மக்களின் மனதை நிரந்தரமாக ஆள்பவரின் பெரும் நினைவை போற்றுவோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதில் மாவட்ட கழக அவைத் தலைவர் ரங்கநாதன், மாவட்ட பொருளாளர் வஜ்ரவேலு, பெருநகர் கோபால், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் குணசேகரன், எம்ஜிஆர் மன்ற மாவட்ட செயலாளர் பூக்கடை ஜகா, உத்திரமேரூர் தொகுதி அமைப்பாளர் யோகானந்தம் உள்பட கட்சி நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×