என் மலர்
உள்ளூர் செய்திகள்

வீடு வீடாக சென்று மருத்துவ பரிசோதனை செய்த போது எடுத்த படம்.
பழவேற்காடு பகுதியில் மருத்துவ குழுவினர் வீடு, வீடாக சென்று பொதுமக்களின் நோய் குறித்து கணக்கெடுப்பு
- மாத்திரை மருந்துகள் பயன்படுத்தும் விதம், பரிசோதனைகள், குறித்து கேட்டறிந்தனர்.
- 1400 வீடுகள் கணக்கெடுக்கப்பட்டதாக மருத்துவ குழுவினர் தெரிவித்தனர்.
பொன்னேரி:
தமிழகத்தில் மக்களை தேடி மருத்துவ திட்டத்தின் கீழ் நோய்களால் பாதிக்கப்பட்டு உள்ள பொது மக்களுக்கு அவர்களது வீடுகளுக்கே சென்று தேவையான மருத்துவ சிகிச்சை, மருந்துகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த திட்டத்துக்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது.
இந்த நிலையில் பொன்னேரி அடுத்த பழவேற்காடு ஊராட்சி பகுதிகளில் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் வீடு, வீடாக சென்று நோயால் பாதிக்கப்பட்டு உள்ள பொதுமக்கள் குறித்தும், அவர்களது நோயின் தன்மை , தேவையான மருத்துவ சிகிச்சைகள் குறித்தும் கணக்கெடுக்கப்பட்டது.
மீஞ்சூர் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் ராஜேஷ் தலைமையில் 40-க்கும் மேற்பட்ட மருத்துவ குழுவினர் வீடு, வீடாக சென்று சர்க்கரை வியாதி, ரத்த அழுத்தம், சளி இருமல் காய்ச்சல், உள்ளிட்ட நோய்களுக்கான அறிகுறிகள் குறித்து கேட்டறிந்து பரிசோதனை செய்தனர். மேலும் மாத்திரை மருந்துகள் பயன்படுத்தும் விதம், பரிசோதனைகள், குறித்து கேட்டறிந்தனர்.
இதில் சுகாதார மேற்பார்வையாளர் பால கிருஷ்ணன், ஊராட்சித் தலைவர் மாலதி சரவணன், மருத்துவ அலுவலர் அன்புச் செல்வி, செவிலியர்கள் பலர் கலந்து கொண்டனர்.
இந்ததிட்டத்தில் 1400 வீடுகள் கணக்கெடுக்கப்பட்டதாக மருத்துவ குழுவினர் தெரிவித்தனர். மேல் சிகிச்சை தேவைப்படுபவர்களுக்கு தேவையான சிகிச்சை அளிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர்கள் தெரிவித்தனர்.






