என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருநின்றவூர் அருகே வீட்டில் பதுக்கி வைத்த 4½ டன் ரேசன் அரிசி பறிமுதல்- ஒருவர் கைது
    X

    திருநின்றவூர் அருகே வீட்டில் பதுக்கி வைத்த 4½ டன் ரேசன் அரிசி பறிமுதல்- ஒருவர் கைது

    • வீட்டில் 90 மூட்டைகளில் 4.5 டன் ரேசன் அரிசி மற்றும் 900 கிலோ கோதுமை பதுக்கி வைத்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
    • ரேசன் அரிசி, கோதுமை மற்றும் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சரக்கு வாகனம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    திருவள்ளூர்:

    திருநின்றவூர் பகுதியில் வீட்டில் பதுக்கி வைத்து ரேசன் அரிசி கடத்தப்படுவதாக திருவள்ளூர் மாவட்ட குடிமைப்பொருள் குற்றப்புலனாய்வுத்துறை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து குடிமைப் பொருள் குற்றப்புலனாய்வு இன்ஸ்பெக்டர் சுந்த ராம்பாள், சப்-இன்ஸ்பெக்டர் நந்தினிஉஷா மற்றும் போலீசார் திருநின்றவூரை அடுத்த நெமிலிச்சேரி , பிரகாசம் நகரில் உள்ள ஒரு வீட்டில் அதிரடியாக சோதனையிட்டனர்.

    அப்போது அந்த வீட்டில் 90 மூட்டைகளில் 4.5 டன் ரேசன் அரிசி மற்றும் 900 கிலோ கோதுமை பதுக்கி வைத்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

    இந்த ரேசன் அரிசி பதுக்கல் தொடர்பாக புளியந்தோப்பு பி.கே காலனியை சேர்ந்த சந்திரசேகர்(32) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

    அப்போது அவர், ரேசன் கடையில் அரிசி, கோதுமைகளை சட்டவிரோதமாக விலைக்கு வாங்கி அதனை வாடகைக்கு எடுத்த வீட்டில் பதுக்கி வைத்ததாக தெரிவித்தார்.

    இதையடுத்து ரேசன் அரிசி, கோதுமை மற்றும் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சரக்கு வாகனம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் அதனை திருவள்ளூரில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்கில் ஒப்படைத்தனர்.

    Next Story
    ×