என் மலர்
உள்ளூர் செய்திகள்

மாமல்லபுரத்தில் மோட்டார் சைக்கிள் விபத்தில் என்ஜினீயரிங் மாணவர் பலி
- ஓ.எம்.ஆர். சாலை வளைவில் திரும்பியபோது கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் அவ்வழியே கியாஸ் சிலிண்டர் ஏற்றி வந்த மினி வேன் மீது மோதியது.
- போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மாமல்லபுரம்:
மாமல்லபுரம் அடுத்த பையனூரில் உள்ள தனியார் கல்லூரியில் எலக்ட்ரிக்கல் என்ஜினியரிங் இறுதி ஆண்டு படித்து வந்தவர் அல்தாப் (வயது22). கேரள மாநிலம் கோட்டயத்தை சேர்ந்த இவர் மாமல்லபுரம் அடுத்த பூஞ்சேரி பகுதியில் தனியாக வீடு எடுத்து தங்கி கல்லூரிக்கு சென்று வந்தார்.
இந்த நிலையில் கல்லூரிக்கு சென்று விட்டு அல்தாப் மோட்டார் சைக்கிளில் திரும்பி வந்து கொண்டு இருந்தார். மாமல்லபுரம் அருகே பவழகாரன்சத்திரம், ஓ.எம்.ஆர். சாலை வளைவில் திரும்பியபோது கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் அவ்வழியே கியாஸ் சிலிண்டர் ஏற்றி வந்த மினி வேன் மீது மோதியது.
இதில் பலத்த காயம் அடைந்த அல்தாப்பை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் போகும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து மாமல்லபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுவண்ணாரப்பேட்டை, இளைய தெருவில் உள்ள பருப்பு கம்பெனி உள்ளது. இங்கு பீகார் மாநிலத்தைச் சேர்ந்த நிரேந்தர் குமார் (30) என்பவர் மூட்டை தூக்கும் தொழிலாளியாக அங்கேயே தங்கி வேலை செய்து வந்தார்.
இன்று அதிகாலை குடிபோதையில் இருந்த நிரேந்தர்குமார் கம்பெனியின் 2-வது மாடியில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதில் தலையில் பலத்த காயம் அடைந்த நிரேந்தர் குமார் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து புதுவண்ணாரப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






