என் மலர்
உள்ளூர் செய்திகள்

மாடம்பாக்கத்தில் நீர்வரத்து கால்வாய்கள் சீரமைப்பு பணி
- கால்வாய்களில் உள்ள அடைப்புகள் ஊராட்சி தலைவர் வெங்கடேசன் ஏற்பாட்டில் முழுவதும் சீரமைக்கப்பட்டது.
- கனமழை பெய்தாலும் கால்வாயில் தண்ணீர் தடையின்றி செல்ல வழி ஏற்பட்டு உள்ளது.
கூடுவாஞ்சேரி அடுத்த மாடம்பாக்கம் ஊராட்சியில் மாடம்பாக்கம் கூத்தனூர் தாய் மூகாம்பிகை நகர், வள்ளலார் நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.
நீர்வரத்து கால்வாயை ஊராட்சிக்கு உட்பட்ட மாடம்பாக்கம், அம்பாள் நகர் லட்சுமி நாராயணன் நகர் பெரிய தெரு இந்திரா காந்தி தெரு, லலிதா நகர், பெருமாள் கோயில் தெரு, விக்னேஷ் நகர், நிஷா நகர், பிள்ளையார் கோயில் தெரு, பொன்னி அம்மன் கோயில் தெரு வழியாக ஆதனூர் கால்வாயில் சென்று அடையும். இந்த கால்வாய்களில் உள்ள அடைப்புகள் ஊராட்சி தலைவர் வெங்கடேசன் ஏற்பாட்டில் முழுவதும் சீரமைக்கப்பட்டது. இதனால் கனமழை பெய்தாலும் கால்வாயில் தண்ணீர் தடையின்றி செல்ல வழி ஏற்பட்டு உள்ளது.
Next Story






