என் மலர்
உள்ளூர் செய்திகள்

மெயினருவியில் சிறிதளவு விழும் தண்ணீரில் குளிக்கும் சுற்றுலா பயணிகள்.
போதிய மழை இல்லாததால் குற்றாலம் அருவிகள் வறண்டன
- மெயின் அருவி, பழைய குற்றாலம் அருவிகளில் மட்டும் மிகவும் குறைந்த அளவு விழுந்த தண்ணீரில் அய்யப்ப பக்தர்கள் அதிகளவில் நீராடி சென்றனர்.
- சபரிமலையிலும் மண்டல பூஜைகள் அனைத்தும் நிறைவு பெற்றுள்ளதால் அய்யப்ப பக்தர்களின் வருகையும் முழுவதுமாக குறைந்தது.
தென்காசி:
தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் அமைந்துள்ள முக்கிய அருவிகள் அனைத்தும் நீர்வரத்து இன்றி வறண்டு காணப்படுகிறது.
குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலையின் உட்பகுதியிலும் போதிய மழை பொழியாததால் நீரோடைகளும் நீரின்றி காணப்படுகின்றன.
குற்றாலத்தில் உள்ள ஐந்தருவி, மெயினருவி, பழைய குற்றாலம், புலி அருவி, சிற்றருவி உள்ளிட்ட அருவிகளுக்கு மிகவும் குறைந்த அளவு நீர்வரத்து இருந்த நிலையில் கடந்த வாரம் சிற்றருவி வறண்டதால் வனத்துறையினர் சார்பில் சிற்றருவி மூடப்பட்டது.
இருப்பினும் மெயின் அருவி, பழைய குற்றாலம் அருவிகளில் மட்டும் மிகவும் குறைந்த அளவு விழுந்த தண்ணீரில் அய்யப்ப பக்தர்கள் அதிகளவில் நீராடி சென்றனர். சபரிமலையிலும் மண்டல பூஜைகள் அனைத்தும் நிறைவு பெற்றுள்ளதால் அய்யப்ப பக்தர்களின் வருகையும் முழுவதுமாக குறைந்தது.
மேலும் சுற்றுலா பயணிகளும் தண்ணீர் இல்லாததால் ஆர்வம் காட்டாததால் அருவிக் கரைகள் அனைத்தும் மக்கள் கூட்டம் இன்றி வெறிச்சோடி காணப்படுகின்றன.
பாலருவிலும் தண்ணீர் வரத்து குறைய தொடங்கி உள்ளதால் இன்னும் ஓரிரு நாட்களில் பாலருவியும் மூடப்படும் என கூறப்படுகிறது.