என் மலர்
உள்ளூர் செய்திகள்

கொளத்தூரில் சட்டக்கல்லூரி மாணவர் தற்கொலை
- வீட்டில் தனியாக இருந்த மோனிஷ் திடீரென படுக்கை அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கொளத்தூர் சிலந்தி குட்டை பகுதியைச் சேர்ந்தவர் பிரபாகரன். இவரது மனைவி மகாலட்சுமி. ரெயில்வேயில் வேலை செய்து வருகிறார். இவர்களது மகன் மோனிஷ் (வயது23). சட்டக் கல்லூரியில் இறுதி ஆண்டு படித்து வந்தார். இவர் ஏற்கனவே 4 பாடங்களில் தோல்வி அடைந்து இருந்ததால் மன உளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று மாலை வீட்டில் தனியாக இருந்த மோனிஷ் திடீரென படுக்கை அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து கொளத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story






