என் மலர்
உள்ளூர் செய்திகள்

காஞ்சிபுரம் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 24 பயனாளிகளுக்கு ரூ.15.60 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவி
- காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்.
- பொதுமக்களிடம் இருந்து 280 மனுக்களை பெற்று அவற்றின் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள அரசு துறை அலுவலர்களுக்கு அவர் உத்தரவிட்டார்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருவாய் அலுவலர் சிவருத்ரய்யா தலைமையில் நடைபெற்றது. பொதுமக்களிடம் இருந்து 280 மனுக்களை பெற்று அவற்றின் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள அரசு துறை அலுவலர்களுக்கு அவர் உத்தரவிட்டார். கூட்டத்தில், உத்திரமேரூர் வட்டம், காரணை மற்றும் ராவத்தநல்லூர் கிராமத்தை சேர்ந்த 24 பயனாளிகளுக்கு ரூ.15.60 லட்சம் மதிப்பில் இலவச வீட்டுமனை பட்டாக்கள் மற்றும் 2 பயனாளிகளுக்கு விதவை உதவித்தொகைக்கான ஆணைகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் உதவி கலெக்டர் (பயிற்சி) அர்பித்ஜெயின், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) புண்ணியகோட்டி, துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) சுமதி ஆகியோர் கலந்து கொண்டனர்.
Next Story






