என் மலர்
உள்ளூர் செய்திகள்

காஞ்சிபுரம் கண்டெய்னர் லாரி டிரைவர் விபத்தில் பலி
- ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் தொழிற்சாலையில் இருந்து கண்டெய்னர் லாரி ஒன்று வேலூர் நோக்கி சென்றது.
- அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் கதிர்வேல் சம்பவ இடத்திலேயே பலியானார்.
காஞ்சிபுரம்:
ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் தொழிற்சாலையில் இருந்து கண்டெய்னர் லாரி ஒன்று வேலூர் நோக்கி சென்றது. கிருஷ்ணகிரி மாவட்டம் பாலக்கோடி பகுதியை சேர்ந்த டிரைவர் கதிர்வேல் லாரியை ஓட்டினார்.
காஞ்சிபுரம் அருகே வெள்ளகேட் பகுதியில் வந்தபோது கண்டெய்னர் பழுதடைந்தது. இதனை சரி செய்வதற்காக டிரைவர் கதிர்வேல் சாலையோரம் லாரியை நிறுத்திவிட்டு கீழே இறங்கினார். அப்போது அவ்வழியே சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் கதிர்வேல் சம்பவ இடத்திலேயே பலியானார்.
Next Story






