என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காஞ்சிபுரத்தில் கொள்ளையன் நகை பறித்ததில் கீழேவிழுந்து பெண் படுகாயம்
    X

    காஞ்சிபுரத்தில் கொள்ளையன் நகை பறித்ததில் கீழேவிழுந்து பெண் படுகாயம்

    • சிங்கப்பெருமாள் கோவில் தெற்கு மாட வீதி பகுதியை சேர்ந்தவர் குணசுந்தரி.
    • மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம வாலிபர் திடீரென குணசுந்தரி கழுத்தில் இருந்த 12 பவுன் நகையை பறித்தான்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம், சிங்கப்பெருமாள் கோவில் தெற்கு மாட வீதி பகுதியை சேர்ந்தவர் குணசுந்தரி (60). இவர் தங்கையின் பேரனின் முதலாவது பிறந்தநாள் விழாவில் பங்கேற்க மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள காந்திநகர் பகுதியில் மற்றொரு பெண்ணுடன் பேசியபடி வந்து கொண்டு இருந்தார். அப்போது எதிரே மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம வாலிபர் திடீரென குணசுந்தரி கழுத்தில் இருந்த 12 பவுன் நகையை பறித்தான். இதில் குணசுந்தரி சில அடிதூரம் தாண்டி கீழே விழுந்தார். பின்னர் கொள்ளையன் நகையுடன் தப்பி சென்று விட்டான். கீழே விழுந்ததில் குணசுந்தரிக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இந்த வீடியோ காட்சி தற்போது வைரலாக பரவி வருகிறது. இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி கொள்ளையனை தேடி வருகிறார்கள்.

    Next Story
    ×