என் மலர்
உள்ளூர் செய்திகள்

காஞ்சிபுரத்தில் வக்கீல்கள் சங்க செயற்குழு கூட்டம்
- காரப்பேட்டையில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி வழக்குரைஞர்கள் சங்க கூட்டமைப்பின் செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது.
- தமிழகம் முழுவதும் காலியாகவுள்ள நீதிபதிகள் மற்றும் நீதிமன்ற பணியாளர் காலிப்பணியிடங்களை அரசு உடனடியாக நிரப்ப வேண்டும்.
காஞ்சிபுரம் அருகே உள்ள காரப்பேட்டையில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி வழக்குரைஞர்கள் சங்க கூட்டமைப்பின் செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் புதிய செயலாளர்,பொருளாளர் தேர்வு நடத்தப்பட்டது. தேர்தல் அலுவலர்களாக சேலத்தை சேர்ந்த ஆ.மூர்த்தி,பெரம்பலூரை சேர்ந்த ஆர்.வாசுதேவன் ஆகியோர் செயல்பட்டனர்.
கூட்டத்தில் சங்க கூட்டமைப்பின் மாநிலத் தலைவராக நாமக்கல்லை சேர்ந்த எஸ்.கே.வேல்,செயலாளராக காஞ்சிபுரத்தை சேர்ந்த பா.கார்த்திகேயன்,பொருளாளராக அம்பத்தூரை சேர்ந்த க.முரளிபாபு ஆகியோர் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டனர். சிறப்பு அழைப்பாளராக காஞ்சிபுரம் எம்.எல்.ஏ. சி.வி.எம்.பி.எழிலரசன் கலந்து கொண்டு பேசினார்.
கூட்டத்தில் தமிழகம் முழுவதும் காலியாகவுள்ள நீதிபதிகள் மற்றும் நீதிமன்ற பணியாளர் காலிப்பணியிடங்களை அரசு உடனடியாக நிரப்ப வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்தில் சங்க துணைத்தலைவர்கள் தா.வித்யாசங்கர்,கா.பு.சிவக்குமார், வழக்குரைஞர்கள் அ.முகுந்தன், ர.தினேஷ்குமார் உட்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த வழக்குரைஞர்கள் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.






