என் மலர்
உள்ளூர் செய்திகள்

காஞ்சிபுரத்தில் ரவுடி போல செல்போனில் பேசி வியாபாரியிடம் பணம் பறிக்க முயற்சி- 3 பேர் கைது
- பணம் கேட்டு மிரட்டுவது குறித்து நெல் மண்டி வியாபாரி தியாகு, சிவகாஞ்சி போலீசாரிடம் புகார் தெரிவித்தார்.
- 2 தனிப்படைகள் அமைத்து செல்போனில் மிரட்டிய நபர் குறித்து தீவிர விசாரணை மேற் கொண்டனர்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாவட்டத்தில் கொலை, கொலை முயற்சி, வழிப்பறி,ஆள் கடத்தல், உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய காஞ்சிபுரம் பொய்யா குளம் பகுதியைச் சேர்ந்த ரவுடி தியாகு, போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் காஞ்சிபுரம் பல்லவர்மேடு பகுதியை சேர்ந்த சரித்திர பதிவேடு குற்றவாளியான பிரபா கூறியதாக சொல்லி ரவுடி தியாகு செல்போனில் பல்லவர்மேடு பகுதியைச் சேர்ந்த நெல் மண்டி வியாபாரி தியாகு என்பவரிடம் பேசி ரூ.1 லட்சம் கேட்டு மிரட்டி உள்ளார்.
பணம் கேட்டு மிரட்டுவது குறித்து நெல் மண்டி வியாபாரி தியாகு, சிவகாஞ்சி போலீசாரிடம் புகார் தெரிவித்தார்.
இதை தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்து, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின் பேரில் 2 தனிப்படைகள் அமைத்து செல்போனில் மிரட்டிய நபர் குறித்து தீவிர விசாரணை மேற் கொண்டனர். சிவகாஞ்சி போலீசார் செல்போன் சிக்னலை வைத்து தீவிர தேடலுக்கு பின்னர் சரித்திரப்பதிவேடு குற்றவாளியான பிரபாவின் கோயம்புத்தூர் நண்பர்கள் ஆன செந்தில் குமார், மோகன், அருண் ஆகிய 3 பேரை கைது செய்தனர். மேலும் ரவுடி தியாகு போல பேசி பணம் கேட்டு மிரட்டுவதற்கு மூளையாக செயல்பட்ட முக்கிய நபரான பிரபாவை சிவகாஞ்சி போலீசார் தேடி வருகின்றனர்.






