என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  இளம்பெண்ணை கற்பழித்து நகை-பணம் கொள்ளை: வாலிபர்கள் 4 பேரிடம் விசாரணை
  X

  இளம்பெண்ணை கற்பழித்து நகை-பணம் கொள்ளை: வாலிபர்கள் 4 பேரிடம் விசாரணை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • போலீசார் விசாரணையில் 4 பேரில் ஒருவருக்கும், புகார் செய்த இளம்பெண்ணுக்கும் இடையே தொடர்பு இருந்து வந்தது தெரியவந்தது.
  • சம்பவத்தன்று வாலிபர் இளம்பெண் வீட்டிற்கு சென்ற போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது.

  திருப்பூர்:

  திருப்பூர் மாநகர போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று ஒரு போன் வந்தது. அதில் பேசிய இளம்பெண் ஒருவர், நான் தனியாக வீட்டில் இருந்த போது எனது வீட்டிற்கு வந்த வாலிபர்கள் 4பேர் என்னை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ததுடன் எனது வீட்டில் இருந்த 3பவுன் நகை, ரூ.20ஆயிரம் பணம் ஆகியவற்றை திருடி சென்று விட்டனர். எனவே அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

  இதனால் அதிர்ச்சியடைந்த நல்லூர் போலீசார் உடனே அந்த இளம்பெண் வசித்து வரும் விஜயாபுரம் பகுதிக்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது அந்த இளம்பெண் கூறிய அடையாளம் மூலம் அப்பகுதியை சேர்ந்த 4 வாலிபர்களை பிடித்து விசாரணை நடத்தினர்.

  விசாரணையில் 4 பேரில் ஒருவருக்கும், புகார் செய்த இளம்பெண்ணுக்கும் இடையே தொடர்பு இருந்து வந்தது தெரியவந்தது. சம்பவத்தன்று அந்த வாலிபர் இளம்பெண் வீட்டிற்கு சென்ற போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் இளம்பெண், வாலிபரிடம் இருந்த பணத்தை பறித்து விட்டு அனுப்பியுள்ளார். இது பற்றி அந்த வாலிபர் தனது நண்பர்கள் 4பேரிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து இளம்பெண்ணிடம் இருந்து நகை-பணத்தை பறிக்க திட்டமிட்ட 4 பேரும் நேற்று விஜயாபுரத்தில் இளம்பெண் வசித்து வரும் வீட்டிற்கு சென்றுள்ளனர். அங்கு சென்றதும், 4பேரும் இளம்பெண்ணை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ததுடன், வீட்டில் இருந்த 3பவுன்நகை, ரூ.20ஆயிரம் பணத்தை பறித்து கொண்டு தப்பி சென்றுள்ளனர். போலீசார் விசாரணையில் 4 பேரும் சிக்கிக்கொண்டனர்.

  தொடர்ந்து அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணை முடிவில் இந்த சம்பவம் குறித்து மேலும் பரபரப்பு தகவல்கள் வெளியாகும் என தெரிகிறது.

  Next Story
  ×