என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    167 மனுக்களுக்கு உடனே தீர்வு
    X

    167 மனுக்களுக்கு உடனே தீர்வு

    • உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை சார்பில் சிறப்பு முகாம் நடைபெற்றது.
    • 167 மனுக்களுக்கு உடனடியாக குடும்ப அட்டைகள் சரிபார்த்து தீர்வு வழங்கப்பட்டது.

    மீஞ்சூரை அடுத்த கொண்டக்கரை ஊராட்சியில் மாவட்ட உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை சார்பில் சிறப்பு முகாம் நடைபெற்றது.

    ஊராட்சி மன்ற தலைவர் ஹரிகிருஷ்ணன் முகாமை தொடங்கி வைத்தார். இதில் குடும்ப அட்டையில் பெயர் நீக்கம்,சேர்த்தல்,புதிய கார்டு விண்ணப்பித்தல்,குடும்ப அட்டையுடன் ஆதார் எண் இணைத்தல்,தொலைபேசி எண் இணைத்தல் உள்ளிட்ட பல்வேறு குறைகள் குறித்து ஏராளமானோர் மனு அளித்தனர்.

    167 மனுக்களுக்கு உடனடியாக குடும்ப அட்டைகள் சரிபார்த்து தீர்வு வழங்கப்பட்டது. இதில் வட்ட வழங்கல் அலுவலர் ரமணி, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கலைவாணன், ஊராட்சி செயலர் முருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×