search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருச்சியில் உணவு பாதுகாப்பு துறையின் குட்கா ரெய்டு நிறுத்தம்
    X

    திருச்சியில் உணவு பாதுகாப்பு துறையின் குட்கா ரெய்டு நிறுத்தம்

    • சென்னை ஐகோர்ட்டில் ஆணையரின் உத்தரவுக்கு எதிராக புகையிலை நிறுவனங்கள் வழக்கு தொடர்ந்தன.
    • தடை நீக்கி உயர்நீதிமன்றம் ஆணையிட்டு உள்ள காரணத்தால் உணவு பாதுகாப்பு துறையின் நடவடிக்கையை நிறுத்தி வைத்துள்ளோம்.

    திருச்சி:

    தமிழகத்தில் பான்பராக், குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்களுக்கு உணவு பாதுகாப்பு துறை ஆணையர் கடந்த 2011ல் தடை விதித்து உத்தரவு பிறப்பித்தார். இதைத்தொடர்ந்து குட்கா பொருட்களை கடத்தும் நபர்கள் மீதும், விற்பனை செய்யும் வியாபாரிகள் மீதும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் நடவடிக்கை மேற்கொண்டு வந்தனர். ஒன்றுக்கு மேற்பட்ட தடவை குட்கா பிடிபட்டால் அந்த கடைகளுக்கு உணவு பாதுகாப்பு துறை சார்பில் சீல் வைக்கப்பட்டு வந்தது.

    இந்த நிலையில் சென்னை ஐகோர்ட்டில் ஆணையரின் உத்தரவுக்கு எதிராக புகையிலை நிறுவனங்கள் வழக்கு தொடர்ந்தன. இதில் ஆணையரின் குட்கா விற்பனை தடை ஆணையை கடந்த 25-ம் தேதி நீக்கி உத்தரவு பிறப்பித்தது.

    இதைத்தொடர்ந்து திருச்சி மாவட்டத்தில் உணவு பாதுகாப்புத் துறையினர் தங்கள் அதிரடி சோதனையை நிறுத்தி உள்ளனர்.

    இது தொடர்பாக உணவு பாதுகாப்பு அலுவலர் ரமேஷ் பாபுவிடம் கேட்டபோது,

    தடை நீக்கி உயர்நீதிமன்றம் ஆணையிட்டு உள்ள காரணத்தால் உணவு பாதுகாப்பு துறையின் நடவடிக்கையை நிறுத்தி வைத்துள்ளோம். இனிமேல் அலுவல் ரீதியான அறிவிப்பு வந்த பின்னர் அதன்படி எங்களது நடவடிக்கை இருக்கும் என்றார்.

    அதேபோன்று காவல் துறையும் எல்லா கடைகளிலும் ரெய்டு நடத்த முடியாது. கோட்பா சட்டத்தின் கீழ் பள்ளிகள், அருகாமையில் உள்ள கடைகளில் குட்கா விற்கப்பட்டால் மட்டுமே நடவடிக்கை எடுக்க முடியும்.

    இதற்கிடையே தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் குட்கா தடை நீக்கியதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய இருப்பதாகவும், முற்றிலும் தடை விதிப்பதற்கு சட்டம் ஏற்றுவது தொடர்பாகவும் ஆலோசனை நடந்து வருவதாக தெரிவித்துள்ளார்.

    தற்போதைக்கு உணவு பாதுகாப்பு துறை மற்றும் காவல் துறையின் நடவடிக்கை நிறுத்தப்பட்டுள்ளதால் குட்கா வியாபாரிகள் உற்சாகத்தில் உள்ளனர்.

    Next Story
    ×