search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி
    X

    கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி

    • தொழிலாளர் பயன்பாட்டிற்காக ஏ.டி.எம். மையம் சில ஆண்டுகளுக்கு முன்பு திறக்கப்பட்டது.
    • சிப்காட் போலீசார் வழக்கு பதிவு செய்து சந்தேகத்தின் பேரில் 3 பேரை விசாரித்து வருகின்றனர்.

    கும்மிடிப்பூண்டி:

    கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் 100-க்கும் மேற்பட்ட ஆட்டோ மொபைல், மின் உற்பத்தி உள்ளிட்ட பல்வேறு தொழிற்சாலைகள் இயங்கி வருகிறது.

    இந்த தொழிற்சாலைகளில் கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, செங்குன்றம், சென்னை, ஆரம்பாக்கம், தடா, சத்தியவேடு, ஊத்துக்கோட்டை, பெரியபாளையம், எல்லாபுரம், பழவேற்காடு, சின்ன மாங்கோடு, சூளூர்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து 24 மணி நேரமும் தொழிலாளர்கள் வந்து செல்கின்றனர்.

    தொழிலாளர் பயன்பாட்டிற்காக ஏ.டி.எம். மையம் சில ஆண்டுகளுக்கு முன்பு திறக்கப்பட்டது.

    இந்த நிலையில் ஏ.டி.எம்.மில் இன்று அதிகாலை சுமார் 1.45 மணிக்கு 3 பேர் கொண்ட கும்பல் கொள்ளை அடிக்க முயற்சித்துள்ளனர்.

    அப்போது தானியங்கி அலாரம் திடீரென ஒலித்துள்ளது.

    சுதாரித்துக் கொண்ட ஏ.டி.எம்.மைய நிர்வாக அலுவலர் போலீஸ் நிலையத்திற்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு தெரிவித்தார். விரைந்து வந்த போலீசார் ஏ.டி.எம். மையத்தை நெருங்கும் போது 3 மர்ம நபர்கள் தப்பி ஓடினர்.

    இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதைத்தொடர்ந்து வங்கி அதிகாரிகள் 7 மணிக்கு விரைந்து வந்து மேற்கண்ட ஏ.டி.எம். மில் கொள்ளை முயற்சி நடந்த இடத்தை பார்வையிட்டனர். இதில் அதிர்ஷ்டவசமாக ரூ.23 லட்சம் தப்பியது.

    இதுகுறித்து சிப்காட் போலீசார் வழக்கு பதிவு செய்து சந்தேகத்தின் பேரில் 3 பேரை விசாரித்து வருகின்றனர்.

    Next Story
    ×