என் மலர்
உள்ளூர் செய்திகள்

யுவராஜ் மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணை வருகிற 1-ந் தேதிக்கு ஒத்திவைப்பு
- நாமக்கல் முதலாவது குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்தது.
- வழக்கு விசாரணையின் போது யுவராஜ் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார்.
நாமக்கல்:
சேலம் மாவட்டம் ஓமலூரை சேர்ந்தவர் பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ். இவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் சங்ககிரியைச் சேர்ந்த தீரன் சின்னமலை பேரவையின் தலைவர் யுவராஜ் மற்றும் அவரது நண்பர்கள் கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கு விசாரணைக்காக நாமக்கல் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் ஆஜராக வந்த யுவராஜ் உள்பட பலர் நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் நடந்து கொண்டனர். இதற்காக அவர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுக்கப்பட்டது.
நாமக்கல் முதலாவது குற்றவியல் நீதிமன்றத்தில் நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. வழக்கு விசாரணையின் போது யுவராஜ் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார்.
இந்த நிலையில் வழக்கை பிப்ரவரி மாதம் 1-ந்தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்து உத்தரவிட்டார். இதை அடுத்து அவர் மீண்டும் கோவை ஜெயிலில் அடைக்கப்பட்டார்.
Next Story