என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சாலிகிராமத்தில் இலவச கண் பரிசோதனை முகாம்
    X

    சாலிகிராமத்தில் இலவச கண் பரிசோதனை முகாம்

    • அரிமா ரவிசந்திரன்-வித்யா ரவிசந்திரன் தம்பதியரின் மகள் சாருமதியின் நினைவாக இலவச கண் பரிசோதனை மற்றும் கண் புரை அறுவை சிகிச்சை சிறப்பு முகாம் நடைபெற்றது.
    • கண் சிகிச்சை நினைவு முகாம் சென்னையில் 6-வது முறையாக நடக்கிறது என்பது குறிப்பிடதக்கது.

    சென்னை:

    சென்னை சாலிகிராமம் கே.கே.சாலையில் உள்ள காவேரி அரசு பள்ளியில் அரிமா ரவிசந்திரன்-வித்யா ரவிசந்திரன் தம்பதியரின் மகள் சாருமதியின் நினைவாக இலவச கண் பரிசோதனை மற்றும் கண் புரை அறுவை சிகிச்சை சிறப்பு முகாம் நடைபெற்றது.

    திருவான்மியூர் அரிமா சங்கம், சென்னை ஆற்காடு சாலை அரிமா சங்கம், மற்றும் அரவிந்த் கண் மருத்துவமனையும் இணைந்து நடத்திய இந்த மருத்துவ முகாமில் பொதுமக்க ளுக்கு இலவச கண் பரிசோதனை மற்றும் கண் அறுவை சிகிச்சை நடைபெற்றது. முகாமை ஏ.எம். வி. பிரபாகர்ராஜா எம்.எல். ஏ. தொடங்கி வைத்தார். இந்த கண் சிகிச்சை நினைவு முகாம் சென்னையில் 6-வது முறையாக நடக்கிறது என்பது குறிப்பிடதக்கது.

    நிகழ்ச்சியில் அரிமா சங்க மாநில தலைவர் இளங்கோ மாணிக்கம், வட்டார தலைவர் என்.எஸ். பாலசுப்ரமணியம், ஆர்.ராஜ்குமார், செயலாளர் ஜி.ரவி, ஆர்.ரகுநந்தன், எம்.எஸ்.பிள்ளை ஆகியோர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×