என் மலர்
உள்ளூர் செய்திகள்

ராமாபுரத்தில் முந்தி செல்ல முயன்றபோது லாரி சக்கரத்தில் சிக்கி உணவு டெலிவரி ஊழியர் பலி
- சென்னை முகலிவாக்கம் பகுதியை சேர்ந்தவர் கோபால். இவரது மகன் பாலாஜி.
- அருப்புக்கோட்டை பகுதியை சேர்ந்த லாரி டிரைவர் ரவிகுமாரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
போரூர்:
சென்னை முகலிவாக்கம் பகுதியை சேர்ந்தவர் கோபால். இவரது மகன் பாலாஜி (வயது20). தனியார் ஆன்லைன் டெலிவரி ஊழியர்.
இவர் நேற்று இரவு பணி முடிந்து போரூர் - கிண்டி டிரங்க் சாலை வழியாக மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.
ராமாபுரம் அருகே வந்த போது முன்னால் சென்று கொண்டிருந்த கான்கிரீட் கலவை ஏற்றி சென்ற லாரியை கோபால் முந்தி செல்ல முயன்றார்.
அப்போது எதிரே வந்த அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று திடீரென கோபால் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது உரசியது. இதில் நிலை தடுமாறிய அவர் கான்கிரீட் கலவை லாரியின் பின் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
தகவல் அறிந்ததும் விரைந்து வந்த பாண்டி பஜார் போக்குவரத்து புலனாய்வு பிரிவு இன்ஸ்பெக்டர் கமலாதேவி மற்றும் போலீசார் கோபாலின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் அருப்புக்கோட்டை பகுதியை சேர்ந்த லாரி டிரைவர் ரவிகுமாரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.






