என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பொன்னேரியில் காய்கறி கடையில் தீ விபத்து
    X

    பொன்னேரியில் காய்கறி கடையில் தீ விபத்து

    • தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீ மேலும் அருகில் உள்ள கடைகளுக்கு பரவாமல் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
    • பொன்னேரி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    பொன்னேரி:

    பொன்னேரி புதிய தேரடி தெருவில் காய்கறிகடை நடத்தி வருபவர் தினகரன் நேற்று வியாபாரம் செய்து விட்டு கடையை மூடி சென்றார். இன்று காலை கடையில் உள்ளே இருந்து புகை வெளிவருவதாக அருகில் உள்ள ஏ.டி.எம் காவலாளி பார்த்து பொன்னேரி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தார்.

    தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீ மேலும் அருகில் உள்ள கடைகளுக்கு பரவாமல் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

    கடையில் உள்ளே மின் இணைப்பு பெட்டியில் இருந்து மின் கசிவு ஏற்பட்டதாக தீயணைப்பு வீரர்கள் தெரிவித்தனர், கடையில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காய்கறிகள் தீயில் கருகி உள்ளன இது குறித்து பொன்னேரி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    Next Story
    ×