என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  தாம்பரம் மாநகராட்சி தி.மு.க.வில் 10 பகுதி செயலாளர் பதவிக்கு தேர்தல்- நாளை வேட்புமனு தாக்கல்
  X

  தாம்பரம் மாநகராட்சி தி.மு.க.வில் 10 பகுதி செயலாளர் பதவிக்கு தேர்தல்- நாளை வேட்புமனு தாக்கல்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • தாம்பரம் மாநகராட்சியில் இதுவரை 5 நகர செயலாளர்கள் இருந்தனர்.
  • பல்லாவரம் ரேடியல் சாலையில் உள்ள ஸ்ரீவெங்கடேஸ்வரா திருமண மண்டபத்தில் மனு வாங்கப்படும்.

  காஞ்சி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் அமைச்சர் தா.மோ.அன்பரசன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-

  தி.மு.க.வின் 15-வது பொதுத் தேர்தலையொட்டி காஞ்சி வடக்கு மாவட்டத்தில் உள்ள தாம்பரம் மாநகர பகுதி கழக நிர்வாகிகள் தேர்தலுக்கு நாளை காலை 10 மணிமுதல் வேட்பு மனு தாக்கல் செய்யலாம்.

  மாலை 5 மணிவரை மனு பெறப்படும். பல்லாவரம் ரேடியல் சாலையில் உள்ள ஸ்ரீவெங்கடேஸ்வரா திருமண மண்டபத்தில் மனு வாங்கப்படும். இதற்கான மனுவை மாவட்ட கழக அலுவலகத்தில் இன்று பெற்றுக்கொள்ளலாம்.

  தேர்தல் நடத்துவதற்காக தலைமை கழக பிரதிநிதி விருதுநகர் தெற்கு மாவட்ட துணை செயலாளர் ராசா அருண்மொழியிடம் பூர்த்தி செய்த வேட்புமனுவை உரிய கட்டணத்துடன் வழங்கிட வேண்டும்.

  இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

  தாம்பரம் மாநகராட்சியில் இதுவரை 5 நகர செயலாளர்கள் இருந்தனர். இப்போது 10 பகுதி கழகமாக பிரிக்கப்பட்டுள்ளது. தாம்பரம் வடக்கு-தெற்கு, பல்லாவரம் வடக்கு தெற்கு, பம்மல் வடக்கு-தெற்கு, செம்பாக்கம் வடக்கு-தெற்கு, பெருங்களத்தூர் வடக்கு-தெற்கு என 10 பகுதி செயலாளர்கள் இனி நியமிக்கப்படுவார்கள்.

  Next Story
  ×