என் மலர்
உள்ளூர் செய்திகள்

மருத்துவம் படிக்காமல் பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்த போலி டாக்டர் கைது
- க்ளினிக்கில் சுகாதாரத்துறை இணை இயக்குநா் கனகராணி தலைமையிலான மருத்துவக் குழுவினர் திடீர் ஆய்வு செய்தனர்.
- க்ளினிக்கிற்கு சுகாதாரத்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள குண்டடம் தாசா்பட்டி பிரிவில் மருத்துவம் படிக்காத ஒருவா் க்ளினிக் நடத்தி வருவதாகவும், நோயாளிகளுக்கு அவா் ஊசி போடுவதுடன், ஆங்கில மருந்துகள் வழங்குவதாகவும் திருப்பூர் மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குநா் கனகராணிக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, அந்த க்ளினிக்கில் சுகாதாரத்துறை இணை இயக்குநா் கனகராணி தலைமையிலான மருத்துவக் குழுவினர் திடீர் ஆய்வு செய்தனர். ஆய்வின்போது, தாசா்பட்டி பிரிவைச் சோ்ந்த தங்கராஜ் (41) என்பவா், மருத்துவம் பயிலாமல் க்ளினிக் நடத்தி வந்தது தெரியவந்தது.
இதையடுத்து, சுகாதாரத்துறை இணை இயக்குநா் கனகராணி அளித்த புகாரின்பேரில் குண்டடம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, போலி டாக்டா் தங்கராஜுவை கைது செய்தனா். மேலும் அந்த க்ளினிக்கிற்கு சுகாதாரத்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.
Next Story






