search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஓட்டு எண்ணும் மையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கோவை சரக டி.ஐ.ஜி. ஆய்வு
    X
    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் ஓட்டு எண்ணும் மையமான சித்தோடு ஐ.ஆர்.டி.டி. பொறியியல் கல்லூரியில் கோவை சரக டி.ஜ.ஜி விஜயகுமார் பார்வையிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்தார்.

    ஓட்டு எண்ணும் மையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கோவை சரக டி.ஐ.ஜி. ஆய்வு

    • கோவை சரக டி.ஜ.ஜி விஜயகுமார் சித்தோடு ஐ.ஆர்.டி.டி. பொறியியல் கல்லூரிக்கு சென்று வாக்கு எண்ணும் மையத்தை பார்வையிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கேட்டறிந்தார்.
    • வாக்கு எண்ணிக்கையின் போது மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள், வசதிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

    ஈரோடு:

    திருமகன் ஈவெரா மறைவையொட்டி ஈரோடு கிழக்கு தொகுதிக்கு வரும் 27-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் தொடங்கி நடந்து வருகிறது. வரும் மார்ச் 2-ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

    இதற்காக ஈரோடு அடுத்த சித்தோடு ஐ.ஆர்.டி.டி. பொறியியல் கல்லூரியில் வாக்கு எண்ணும் மையம் அமைக்கப்பட்டுள்ளது. வாக்கு எண்ணும் மையத்திற்கு தேவையான வசதிகள் செய்யப்பட்டு வருகிறது. ஏற்கனவே இதுகுறித்து மாவட்ட தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான கிருஷ்ணனுண்ணி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    இந்நிலையில் கோவை சரக டி.ஜ.ஜி விஜயகுமார் சித்தோடு ஐ.ஆர்.டி.டி. பொறியியல் கல்லூரிக்கு சென்று வாக்கு எண்ணும் மையத்தை பார்வையிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கேட்டறிந்தார். வாக்கு எண்ணிக்கையின் போது மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள், வசதிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

    இந்த ஆய்வின்போது ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன், பவானி டிஎஸ்பி அமிர்தவர்ஷினி உள்பட போலீஸ் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

    Next Story
    ×