என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்- ஓட்டு எண்ணிக்கை 16 மேஜைகளில் நடைபெறும்: மாவட்ட தேர்தல் அதிகாரி பேட்டி
    X
    ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தலையொட்டி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள சித்தோடு ஜ.ஆர்.டி.டி. பொறியியல் கல்லூரியில் நடைபெற்று வரும் முன்னேற்பாடு பணிகளை பொதுப்பார்வையாளர் ராஜ்குமார்யாதவ், மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் கிருஷ்ணனுண்ணி, கிழக்கு தேர்தல் நடத்தும் அலுவலர் சிவக்குமார் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்- ஓட்டு எண்ணிக்கை 16 மேஜைகளில் நடைபெறும்: மாவட்ட தேர்தல் அதிகாரி பேட்டி

    • ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் ஓட்டு எண்ணிக்கை 2 அறைகளில் 16 மேஜைகளில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
    • ஒரு அறையில் 10 மேஜைகளும், மற்றொரு அறையில் 6 மேஜைகளிலும் ஓட்டு எண்ணிக்கை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் மொத்தம் 77 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதில் தேர்தலில் ஒரு வாக்கு சாவடிக்கு 5 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்படுகிறது.

    ஓட்டுப்பதிவு முடிந்ததும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் ஓட்டு எண்ணும் மையமான சித்தோடு அரசு பொறியியல் கல்லூரிக்கு கொண்டு செல்லப்பட்டு மார்ச் மாதம் 2-ந் தேதி காலை 8 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை தொடங்குகிறது. இந்த நிலையில் முன்னேற்பாடு பணிகளை மாவட்ட தேர்தல் அதிகாரி கலெக்டர் கிருஷ்ணனுண்ணி, பொதுப்பார்வையாளர் ராஜ்குமார்யாதவ், கிழக்கு தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் சிவக்குமார் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    பின்னர் மாவட்ட தேர்தல் அதிகாரி கலெக்டர் கிருஷ்ணனுண்ணி கூறியதாவது:-

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் ஓட்டு எண்ணிக்கை 2 அறைகளில் 16 மேஜைகளில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில் ஒரு அறையில் 10 மேஜைகளும், மற்றொரு அறையில் 6 மேஜைகளிலும் ஓட்டு எண்ணிக்கை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×