என் மலர்
உள்ளூர் செய்திகள்

சென்னையில் உள்ள இல்லத்தில் எடப்பாடி பழனிசாமி தேசிய கொடி ஏற்றினார்
- அ.தி.மு.க. நிர்வாகிகளும் தொண்டர்களும், பொதுமக்களும் ஆக. 13 முதல் 15ந் தேதி வரை அவரவர் இல்லங்களில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்த வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்தார்.
- சென்னை பசுமைவழிச்சாலையில் உள்ள செவ்வந்தி இல்லத்தில் எடப்பாடி பழனிசாமி இன்று காலை தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.
சென்னை:
பிரதமர் நரேந்திர மோடி இந்திய திருநாட்டின் 75-வது சுதந்திர தினத்தை சிறப்பாக கொண்டாட கூடிய வகையில் இல்லம் தோறும் தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
அதனையொட்டி அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி தமிழகமெங்கும் அ.தி.மு.க. நிர்வாகிகளும் தொண்டர்களும், பொதுமக்களும் ஆகஸ்டு 13 முதல் 15ந் தேதி வரை அவரவர் இல்லங்களில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்த வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.
சென்னை பசுமைவழிச்சாலையில் உள்ள செவ்வந்தி இல்லத்தில் எடப்பாடி பழனிசாமி இன்று காலை தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.
Next Story






