என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பூரில் மின் ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்
- அரசு ஊழியர் பெறும் குடும்ப நல நிதி 5லட்சம் ரூபாயை, மின்வாரிய பணியாளருக்கும் வழங்க வேண்டும்.
- மின் விபத்தில் பலியாகும் ஊழியர் குடும்பத்துக்கு 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கும் அரசாணையை நிறைவேற்ற வேண்டும்.
திருப்பூர்:
தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு (சி.ஐ.டி.யு.,) திருப்பூர் கிளை சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பூர் பி.என். ரோடு மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு இன்று காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. இதில் மின் ஊழியர்கள் பலர் பங்கேற்றனர். அவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
மின்சார துறையில் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். வேலைப்பளு ஒப்பந்தத்துக்கு எதிராக வெளியிட்ட உத்தரவுகளை வாபஸ் பெற வேண்டும். முத்தரப்பு ஒப்பந்தத்தை களைந்து, புதிய ஒப்பந்தம் உருவாக்க வேண்டும். பணியாளர் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு வழங்க வேண்டிய பணப்பலன்களை தாமதமின்றி வழங்க வேண்டும்.
அரசு ஊழியர் பெறும் குடும்ப நல நிதி 5லட்சம் ரூபாயை, மின்வாரிய பணியாளருக்கும் வழங்க வேண்டும். மின் விபத்தில் பலியாகும் ஊழியர் குடும்பத்துக்கு 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கும் அரசாணையை நிறைவேற்ற வேண்டும். கடந்த 2019 டிசம்பர் மாதத்துக்கு பிறகு பணியில் சேர்ந்தவர்களுக்கு, 6 சதவீதம் சம்பள உயர்வு வழங்க வேண்டும். கேங் மேன்களுக்கு, இடமாற்றம் மற்றும் கள உதவியாளர் பணிமாற்றம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது.






