என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  சிவன் கோவில் பூஜையில் சங்கு ஓசைக்கு ஏற்ப சத்தமிட்டு வழிபடும் நாய்- பக்தர்கள் பரவசம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • சிவன், பெருமாள் கோவில்களில் காவல் தெய்வமாக பைரவர் வீற்றிருப்பார்.
  • இரவில் சாமி பள்ளியறைக்கு சென்றபின்னர் கோவில் சாவியை பைரவர் முன்பாக வைத்து எடுத்து செல்வது பல கோவில்களில் வழக்கமாக உள்ளது.

  சேலம்:

  சேலம் அருகே வலசையூர் அரூர் மெயின்ரோட்டில் சுந்தர்ராஜ் காலனி பஸ் நிறுத்தம் அருகில் ஆத்மலிங்கேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் அமாவாசை, பவுர்ணமி நாட்களில் சிறப்பு பூஜை, வழிபாடு நடைபெறுவது வழக்கம். இந்த பூஜையின்போது சமீபகாலமாக மணி ஓசைக்கு ஏற்ப நாய் சத்தமிட்டு வழிபடுவது அந்த பகுதி பக்தர்களை பரவசப்படுத்தி உள்ளது.

  இந்த கோவிலில் பிரமாண்டமான 18 அடி உயர லிங்கம் உள்ளது. சிவனுக்கு உகந்த பிரதோஷம், அஷ்டமி, பவுர்ணமி பூஜையின்போது அபிஷேகம், அலங்காரம் வழிபாடு நடக்கும். அப்போது லிங்கத்துக்கு நெய் அபிஷேகம் செய்யப்படும். இந்த வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.

  கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு இந்த பகுதிக்கு 2 நாய்கள் வந்தன. இந்த கோவில் வழிபாட்டின்போது 2 நாய்களும் கோவில் வளாகத்திலேயே சாமியை சுற்றி சுற்றி வலம் வரும்.

  சமீபத்தில் இங்குள்ள நாய் 4 குட்டிகளை ஈன்றது. இந்த குட்டிகள் வளர வளர கோவில் பூஜையை உன்னிப்பாக கவனித்தன. அவற்றில் ஒரு நாய் கோவில் படியில் நின்று வழிபட்டது. முதலில் ஏதோ நாய் தானே நிற்கிறது என பக்தர்கள் நினைத்துவிட்டனர். நாளடைவில் அந்த நாயின் செயல்பாடு பக்தர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. கோவில் பூஜையின்போது சங்கு ஒலிக்க தொடங்கியதுமே சங்கு ஒலிக்கு ஏற்ப அவை சத்தமிட தொடங்கின.

  மற்ற நாட்களில் இந்த நாய் அங்கு வருவதில்லை. பவுர்ணமி, பிரதோஷம், அஷ்டமி நெய் அபிஷேக வழிபாட்டின்போது மட்டும் சங்கு ஒலிக்கு ஏற்ப சத்தமிடுகிறது. கடந்த சில நாட்களாகவே நாயின் இந்த செயல் வியப்பாகவே இருப்பதாக பக்தர்கள் கூறுகிறார்கள். பொதுவாக நாயை பைரவரின் வாகனம் என்பார்கள். சிவன், பெருமாள் கோவில்களில் காவல் தெய்வமாக பைரவர் வீற்றிருப்பார். இரவில் சாமி பள்ளியறைக்கு சென்றபின்னர் கோவில் சாவியை பைரவர் முன்பாக வைத்து எடுத்து செல்வது பல கோவில்களில் வழக்கமாக உள்ளது. இந்த சூழலில் பைரவரின் வாகனமான நாய் சிவனை வழிபடுவது சேலம் பகுதியில் சற்று புதுமையானதாகவும், ஆச்சரியமானதாகவும் உள்ளதாக பக்தர்கள் கூறுகின்றனர்.

  இதுபற்றி கோவில் நிர்வாகி ராஜேந்திர குருஜி கூறியதாவது:-

  இங்கு 18 நாகங்களுடன் ஸ்ரீ ஆத்ம லிங்கேஸ்வரர் அருள்பாலிக்கிறார். தமிழகத்திலேயே இதுபோன்ற லிங்கம் வேறு இல்லை. கடந்த 6 வருடமாக பைரவர் வாகனம் இந்த வழிபாட்டில் பங்கேற்கிறது. லிங்கம் பிரதிஷ்டை செய்து 7 வருடம் ஆகிறது.

  இங்கு காலபைரவர், விநாயகர், காமாட்சி அம்மன் சிலைகளும் பிரதிஷ்டை செய்யப்பட்டு உள்ளன. தஞ்சை பெரியகோவிலில் உள்ளதுபோன்று ஒரே கல்லிலால் ஆன நந்தி சிலையும் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது. இந்த நந்தி சிலை தஞ்சை பெரியகோவில் நந்தியைவிட அளவில் சிறியது. 110 டன் எடை உடையது. சிவன், காமாட்சியம்மன் உள்ளிட்ட தெய்வங்களின் சக்தி பரிபூரணமாக உள்ளதால்தான் பைரவர் வாகனமான நாய் வழிபடுகிறது. இது கலியுக அற்புதங்களில் ஒன்றாகும்.

  இவ்வாறு அவர் கூறினார்.

  Next Story
  ×