என் மலர்
உள்ளூர் செய்திகள்

டெங்கு கொசு- கட்டிட உரிமையாளர்களுக்கு ரூ. 1 லட்சம் அபராதம் விதிப்பு
- கட்டுமானபணி கட்டிடத்தில் தேங்கியிருக்கும் தண்ணீர் மற்றும் கட்டுமான பொருள்களில் டெங்கு நோய் பரப்பும் கொசுகள் இருப்பது தெரியவந்தது.
- 3 கட்டிடங்களுக்கு மொத்தம் ரூ.1 லட்சத்து 13 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
ஆலந்தூர்:
ஆலந்தூர் மண்டல சுகாதார அதிகாரி சுதா தலைமையில் சுகாதார அலுவலர்கள், ஆய்வாளர்கள் ஆலந்தூர் ஆதம்பாக்கம், நங்கநல்லூர், பழவந்தாங்கல், மணப்பாக்கம், முகலிவாக்கம் ஆகிய பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணியை தீவிரப்படுத்தி உள்ளனர்.
இதில் ஆலந்தூர், ஆதம்பாக்கம், மணப்பாக்கம் ஆகிய பகுதகளில் புதிதாக நடைபெறும் கட்டுமானபணி கட்டிடத்தில் தேங்கியிருக்கும் தண்ணீர் மற்றும் கட்டுமான பொருள்களில் டெங்கு நோய் பரப்பும் கொசுகள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து 3 கட்டிடங்களுக்கு மொத்தம் ரூ.1 லட்சத்து 13 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
Next Story






