search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அம்பத்தூர் மண்டலத்தில் வடகிழக்கு பருவமழை குறித்து ஆலோசனை கூட்டம்
    X

    அம்பத்தூர் மண்டலத்தில் வடகிழக்கு பருவமழை குறித்து ஆலோசனை கூட்டம்

    • நீர்வள ஆதாரத்துறை, நெடுஞ்சாலைத்துறை உட்பட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
    • பணிகள் மற்றும் தற்போது நடைபெற்று வரும் பணிகள் குறித்து கலந்துரையாடினர்.

    அம்பத்தூர்:

    தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை பெய்து வருவதை ஒட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அரசு அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர். அதேபோல் சென்னை மாநகராட்சி அம்பத்தூர் மண்டலம் 7- க்குட்பட்ட 15 வார்டுகளில், வடகிழக்கு பருவ மழையை எதிர்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்த ஆலோசனை கூட்டம் அம்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ஜோசப் சாமுவேல் தலைமையில் மண்டல அலுவலகத்தில் நடைபெற்றது. மண்டல குழு தலைவர் பி.கே. மூர்த்தி முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் மண்டல ஆணையர் விஜிலா மற்றும் மின்சாரத்துறை, வருவாய்த்துறை, நீர்வள ஆதாரத்துறை, நெடுஞ்சாலைத்துறை உட்பட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் மண்டலத்துக்குட்பட்ட 15 வார்டுகளை சேர்ந்த கவுன்சிலர்கள் தங்களது பகுதியில் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் மற்றும் தற்போது நடைபெற்று வரும் பணிகள் குறித்து கலந்துரையாடினர். மேலும் மழைநீர் தேங்காத வண்ணம் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்றும், அவ்வாறு தேங்கும் பட்சத்தில் அதனை உடனடியாக அப்புறப்படுத்த அதிக திறன் கொண்ட மோட்டார்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டனர்.

    அதேபோல் பெருமழை பெய்து வெள்ளம் ஏற்படும் பட்சத்தில் பொதுமக்களுக்கு தேவையான உணவுகள் மற்றும் தங்குவதற்கான திருமண மண்டபங்கள், பள்ளி வகுப்பறைகள் உட்பட பல்வேறு அடிப்படை வசதிகளும் செய்து தரவேண்டி சட்டமன்ற உறுப்பினர் மற்றும் மண்டல குழு தலைவர் ஆகியோரிடம் கோரிக்கை வைத்தனர். இதில் கவுன்சிலர்கள் டி.எஸ்.பி.ராஜகோபால், உஷா நாகராஜ், சாந்தகுமாரி, செயற்பொறியாளர்கள் சதீஷ்குமார்,குமாரசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×