search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் தடுப்பு பணிகளை துரிதப்படுத்த வேண்டும்- அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவு
    X

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் தடுப்பு பணிகளை துரிதப்படுத்த வேண்டும்- அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவு

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பொது இடங்களில் உள்ள குப்பைகள், மழைநீர் தேங்கும் கட்டமைப்புகள் ஆகியவற்றை அகற்றுமாறு அறிவுறுத்தப்பட்டது.
    • நோய்த் தடுப்பு பணிகளை துரிதப்படுத்த அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தொற்று நோய் தடுப்பு குறித்த மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் கலெக்டர் கலைச்செல்வி மோகன் தலைமையில் நடைபெற்றது.

    இந்த ஆய்வு கூட்டத்தில் ஒவ்வொரு துறையும் மேற்கொள்ள வேண்டிய நோய் தடுப்பு நடவடிக்கைகளை குறித்து அதிகாரிகளுக்கு கலெக்டர் கலைச்செல்வி அறிவுறுத்தினார். பொது சுகாதாரத் துறைக்கு காய்ச்சல் கண்காணிப்பு மற்றும் தொடர் சிகிச்சை, களப்பணியில் தோழமை துறைகளை ஒருங்கிணைத்து நோய்த் தடுப்பு பணிகளை உறுதி செய்ய அறிவுறுத்தப்பட்டது.

    வீடுகளிலும், வீட்டைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் மழைநீர் தேங்காமலும், தேவையற்ற பொருட்களை அகற்ற வேண்டும். ஊரக வளர்ச்சி துறையினர் கொசுப்புழு ஒழிப்பு பணிகளை ஒருங்கிணைத்து செயல்பட வேண்டும். குளோரினேஷன் செய்யப்பட்ட பாதுகாப்பான குடிநீர் வழங்க வேண்டும் என்று கூறினார்.

    டெங்கு நோய் தடுப்பு பணிகளை துரிதப்படுத்த ஊராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சி நிர்வாகத்திற்கு தேவையான நோய்த் தடுப்பு தற்காலிக பணியாளர்களை நியமித்து நோய்த் தடுப்பு பணிகளை துரிதப்படுத்த அதிகாரிகளுக்கு கலெக்டர் கலைச்செல்வி உத்தரவிட்டார்.

    பொது இடங்களில் உள்ள குப்பைகள், தேவையற்ற டயர்கள், மழைநீர் தேங்கும் கட்டமைப்புகள் ஆகியவற்றை அகற்றுமாறு அறிவுறுத்தப்பட்டது. பள்ளிக்கு தினசரி வருகை தரும் குழந்தைகளுக்கு ஏதேனும் காய்ச்சல் அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக பெற்றோருக்கு தெரிவித்து, சிகிச்சை அளிக்கவும், மேலும், பள்ளிக்கு வராத குழந்தைகளுக்கு ஏதேனும் காய்ச்சல் இருக்கிறதா என அறிந்து அவர்கள் விவரம் அருகிலுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உடனடியாக தெரிவிக்குமாறும், அதற்கான பொறுப்பு ஆசிரியரை நியமிக்கவும் கலெக்டர் அறிவுறுத்தினார்.

    Next Story
    ×